பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/105

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 101


என்ற திருக்குறள், சூது செய்து பிறர் பங்கைத் திருடிச் சேர்க்கும் பொருளைக் குறிக்கிறது.

"அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்

கேடும் நினைக்கப் படும்"
(169)

என்ற திருக்குறள், கெட்டவன் பொருளாளி யாதலும் நல்லவன் உழைத்துப் பிழைப்பவன்) வறுமையாளி யாதலும் சமூகத்தின் குற்றம்; ஆட்சியின் குற்றம். நம்பாமல் ஆராய்க: மாற்றுக என்று வழி நடத்துகிறது.

பொருள் உற்பத்தி செய்யும் தொழிலே சிறந்த தொழில் என்பது மார்க்சியம். திருக்குறளும் செய்க பொருளை என்று கூறுகிறது.

பல்வேறு உடைமைகளைப் பற்றி வள்ளுவம் எடுத்துக் கூறுகிறது. ஆயினும் தனியுடைமை பற்றித் திருக்குறள் எதுவும் கூறவில்லை. உடைமையைப் பற்றிக் கூறவரும் பொழுது திருக்குறள், உழைப்பிற்குரிய ஊக்கத்தையே உள்ளம் உடைமை உடைமை என்று கூறுகிறது.

ஏழ்மையையும் வறுமையையும் மனித குலத்தின் சாபக்கேடு என்று மார்க்சியம் கூறுகிறது. திருக்குறளும்

"இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து

கெடுக உலகியற்றி யான்,"
(1062)

என்று கூறுகிறது.

மார்க்சியம் கடவுளை நம்பவில்லை. ஏன்? மனிதன் தன்னுடைய வாழ்க்கையை உருவாக்குவது தன்னைவிட மேலானவராக இருக்கும் கடவுள் பொறுப்பு என்று நம்பினால் மனிதன் முன்னேற்றத்திற்குரிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளமாட்டான் என்பது மார்க்சியம். திருக்குறள் கடவுளை ஒத்துக் கொள்கிறது. ஆனால் கடவுள்தான் மனித வாழ்வின் மேம்பாட்டுக்குப் பொறுப்பு என்ற மதவாதத்தை மறுக்கிறது. கடவுள்