பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/129

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 125


'துறந்தார்க்கும் துவ்வா. தவர்க்கும் இறந்தார்க்கும்

இல்வாழ்வான் என்பான் துணை"
(42)

அருமையான குறள்! துறந்தார்க்கு இல்லறத்தார் துணை! ஆம் அவர்கள் யாதொரு உடைமையும் இல்லாதவர்கள். (வள்ளுவர் காலத்தில்) அவர்கள் வீடும் ஊரும் உலகமும் வளர்ந்து வாழத் தவம் இயற்றுகிறார்கள். ஆதலால் அவர்களைப் புரத்தல் - இல்லறத்தார் கடன். இல்லறத்தில் வாழ்ந்தவர்கள் குறிப்பிட்ட காலம் துய்த்து மகிழ்ந்து பின் மக்களுக்குப் பொறுப்பைத் தந்து துறவறம் பயிலுதல் தமிழர் மரபு. அங்ங்ணம் வாழும் துறவிகளை உண்டியும், உறையுளும், உறுநோய்க்கு மருந்தும் தந்து காப்பாற்றுதல் இல்லறத்தார் கடன்.

அடுத்துவரும் கடமை நெஞ்சைத் தொடுகிறது. வள்ளுவத்தின் மாட்சி மலையென உயர்கிறது. உலகில் துய்ப்பதற்குரிய பொருள்கள் ஒன்றல்ல, இரண்டல்ல, பலப்பல. இவற்றில் பலவற்றைப் பலர் துய்க்கமுடியாமல் ஏக்கமுற்றிருப்பர். தாம் துய்க்காததை, மற்றவர் துய்ப்பது அறிந்து அலமரலாம்; அழுக்காறு கொள்ளலாம்; அதனால் தீவினைகள் செய்யத் தலைப்படலாம். ஆதலால் துய்க்க வேண்டியவற்றைத் துய்க்காமல் இருப்பவர்க்குத் துய்ப்பன வழங்க வேண்டும். துய்ப்பன வழங்குதல் தீவினை செய்வதைத் தடுத்து உய்யும் நெறியில் ஆற்றுப்படுத்தி அறத்தினில் ஊக்கும். அப்பரடிகள்,

"துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ" (தேவாரம் அடங்கல் 7173) என்பார். இன்றைய உலகியலோ வள்ளுவத் திற்கு முற்றும் முரணாக இயங்குகிறது. துய்க்கும் பொருள் களை நிறையப் பெற்றிருப்போருக்கு விருந்து உபசாரம், மரியாதை என்ற பெயரில் திரும்பத் திரும்பக் கிடைக்கிறது. மருத்துவ இயலார் கூற்றுப்படி அவர் உண்ணக் கூடாதனவும் ஒதுக்கப்பெற்றனவும் கிடைக்கின்றன. ஆனால் துய்க்கும் வாய்ப்பினைப் பெற்றும் வசதியற்றவர்க்கு யாதொன்றும்