பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/132

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

128 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


படைக்கும் தலைமுறையினரை நமது நாடு பெற்று மகிழத்தக்க வகையில் வள்ளுவத்தின் வழி மனையறம் சிறப்பதாக.

சமுதாய வாழ்க்கை
மனிதன் கூடி வாழப் பிறந்தவன். மனிதனை ஒரு சமூகப் பிராணி (Social animal) என்பர். மனித வாழ்க்கையின் வளர்ச்சிக்கும் பாதுகாப்புக்கும் கிடிவாழ்தல் தவிர்க்கமுடி யாதது மட்டுமன்று தேவையும் கூட. சமுதாயம் என்ற அமைப்பு உயிர்ப்புள்ள ஒன்று. அந்தச் சமுதாயக் கூட்ட மைப்புக்குள்ள சக்தி, மகத்தானது. அந்தச் சக்தி ஆக்கவும் செய்யும்; அழிக்கவும் செய்யும். ஆனால் அப்படியொரு உயிர்ப்புள்ள, உணர்வு பூர்வமான சமுதாய அமைப்பு இன்னும் தோன்றவில்லை. வரலாற்றுக்கு முந்திய தொன்மைக் கால்த்தில் அத்தகைய சமுதாய அமைப்பு இருந்ததாக மார்க்ஸ் கூறுகிறார். சமுதாய அமைப்பு, கட்டுக் குலைந்து நெகிழ்ந்து போகும்பொழுதுதான் ஒழுக்க நெறிகள் கற்பிக்கப்படுகின்றன; சட்டங்கள் தோன்றுகின்றன; தண்டனைகள் தரப்படுகின்றன; ஆனால் இந்த முறையும் காலப் போக்கில் தடம் புரண்டது. ஆட்சியாளர்கள் மக்களிடத்திலிருந்து பெற்ற அதிகாரத்தை மக்களுக்கு எதிராகவே பயன்படுத்திச் சுதந்தரத்தைப் பறித்துக் கொத்தடிமையாக்கி விடுகின்றனர். இவை, வரலாற்று நிகழ்வில் காணப்பெற்ற உண்மைகள். இன்று இருப்பது ஒரு கூட்டமைப்பே சமுதாய அமைப்பன்று! ஒர் உயர்ந்த சமுதாய அமைப்புக்கு எடுத்துக்காட்டு எவ்விதக் குறையு மில்லாது விளங்கும் ஒரு நல்லுடம்பாகும். உடம்பில் அமைந்துள்ள பொறிகளுக்கு, புலன்களுக்கு வேறு வேறு பணிகளுண்டு. அவை தம்முள் ஒத்திசைந்து விளங்கும். ஒன்றோடொன்று மோதா ஒன்றினைப் பிறிதொன்று பாதுகாக்கும். இந்தக் கூட்டு நிகழ்வில் பிழை ஏற்பட்டு