பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/134

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

130 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மற்றவர்களுக்கு உதவுவது தன்னுடைய நீங்காக் கடமைகளுள் ஒன்று என்று கருதி உதவுதல் பிறிதொன்று தன்னயப்பில்லாமல் தன்னைமறந்து தனக்கு வரும் இடர்களையும் ஏற்றுக்கொண்டு உதவிசெய்தல் - ஒப்புரவு இயற்றுதல் மற்றொன்று என்று ஒப்புரவுச் செயற்பாட்டைத் தரப்படுத்தி, 'ஊருணி', 'பயன்மரம்', 'மருந்து மரம்' என்று ஒப்புமைப் படுத்தி விளக்கிக்காட்டுகிறார். இந்த மூன்று குறள்கள் ஒரு சொற்பொழிவுக்குரிய செய்திகளையுடையன; அருமை வாய்ந்த செய்திகளை உடையன. அறிஞர்களாகிய நீங்கள் அறிந்து அனுபவித்திருப்பீர்கள்.

"ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் பேரறி வாளன் திரு”

(215)

"பயன்மரம் உள்ளுர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கட் படின்"

(216)


"மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கட் படின்"

(217)

இத்தகைய ஒப்புரவு நெறிதான் உலக அரங்கில் கூட்டுறவு இயக்கமாகப் பின்னர் வளர்ந்தது. ஆனால் அந்தக் கூட்டுறவு இயக்கம் அதனுடைய நோக்கங்களுக்கு ஏற்றவாறு மக்கள் மன்றத்தில் காலூன்றவில்லை. சமுதாய அமைப்பில், அதுவும் மக்களாட்சி நிலவும் நாட்டில் திட்டங்களை இயற்றுதல், மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்குரிய பணிகளைச் செய்தல், ஒருவரிடம் இருக்கும் செல்வம் இழப்பில்லாமல் மற்றவர் முன்னேற்றத்திற்குப் பயன்படுதல் ஆகிய பணியைக் கூட்டுறவு இயக்கம் மேற்கொள்ள வேண்டும், "கூட்டுறவு இயக்கமும் இருக்கிறது" என்பதுபோலத்தான் நம்முடைய நாட்டில் கூட்டுறவு இயக்கம் இருக்கிறது. தமக்குத் தேவையிருந்தாலும் தேவையில்லாது போனாலும் கூட்டுறவில் சேர்த்து நாட்டுமக்களுக்குரிய பணியைச் செய்யவேண்டும் என்ற ஆர்வத் துடிப்பு, படித்தவர்கள்