பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/151

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 147



"அறனெனப்பட்டதே இல்வாழ்க்கை" என்று ஐயத்திற்கு இடமின்றி அழுத்தமாக இயம்புகிறார். ஏன்? வாழ்க்கையின் பேறுகளை வேறு வேறு நெறிகளில் பெற முயல்வார் வெற்றி பெறுதல் அரிது.

"இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்

முயல்வாருள் எல்லாம் தலை"

(47)

என்று இல்லறத்தைப் பாராட்டுகின்றார். எனவே மனையறத்தைச் சிற்றின்பம் என்று பறிப்பதும், அது இறவாத இன்ப அன்பினைப் பெறுதற்குத் தடை என்பதும் *wஉண்மையறியாதார் கூற்று.

மனையற வாழ்க்கையில் நின்று வாழ்வாங்கு வாழ்பவன், வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படுவான் என்று வள்ளுவம் உறுதி கூறுகிறது. உயிர், படிப்படியாக அன்பில் வளர மனையறம் துணை செய்கிறது. உயிர்கள் துய்த்தலினால் துன்புறுவதுமில்லை; கேடுறுவதுமில்லை; இன்பத்திற்குத் தடையுமில்லை; வீடு பேற்றுக்குத் தடையுமில்லை. ஆனால் துய்த்தலில் ஏற்படும் உள்ளத்தின் விருப்பு - வெறுப்பு உணர்ச்சிகள் துன்பத்தைத் தருகின்றன. தூய்மையான துய்த்தல் நெறி, அளவிலாத இன்பத்தைத் தரும். பொருந்தா உணவைப் பெருந்தீனியாகத் தின்பது துய்த்தலன்று. பொருந்திய சுவைமிக்க உணவைச் சுவைத்து உண்பதே துய்த்தல். இங்கனம் உணவைச் சுவைத்துத் துய்ப்பதால் உடல்நலம் பெருகும்; உயிர் நலம் பெறும்; உணர்வும் சிறக்கும். உண்ணாது பட்டினி கிடப்பது சமயம் வகுத்த நோன்பன்று. 'உண்க', வாழ்வதற்காக 'உண்க', வகையறிந்து உண்க, அற்றது அறிந்து உண்க-இதுவே சமயம் காட்டும் துய்த்தல் நெறி.

காதல் வாழ்க்கைத் துய்ப்புக்கும் இந்நெறியே பொருந்தும். பிடியூட்டிப் பின்னுண்ணும் களிறு போற்றிய நலத்தை வாழ்க்கையில் வளர்த்துத் தம்முள் மாறி அன்பு