பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/165

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 161



ஆறறி வதுவே அவற்றொடு மனனே
நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத் தினரே.

(தொல். மரபு 27)

படிமுறை வளர்ச்சியில் உயிர் ஓரறிவில் தொடங்கி ஆறறிவுவரை வளர்ந்து அதனைக் கடந்த பெருநிலை எய்துதல் ஏழாவது நிலை. இந்தப் படிமுறைகளை நினைவிற்கொண்டு 'ஏழுபிறப்பு' என்றார்களா? வள்ளுவம் 'எழு' என்றே குறிப்பிடுகிறது. ஆதலால் புதிதாகத் தோன்றி வரும் பிறப்பு என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், எழு பிறப்பு என்றால் இனிவரும் பிறப்பு என்பது தெளிவாகப் புலப்படுகிறது. திருவள்ளுவர் தெளிவாகவே உயிர், உடலை நீக்கிப் புது உடலைப் பெறும் என்று கூறுகிறார்.

"குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போடு
உயிரிடை நட்பு”. (338)

குடம்பை என்ற சொல்லுக்கு முட்டை என்றும் கூடு என்றும் இரு வேறு பொருள் கொள்கின்றனர். இப்பொருள் வேறுபாடு அடிப்படைக் கொள்கைக்கு ஒன்றும் பெரிய வேற்றுமை தந்துவிடவில்லை. உடம்பை விட்டு உயிர் பிரிகிறது; பிறிதொரு உடம்பைச் சார்கிற தென்பதுதானே பொருள்! அதுமட்டுமன்று. ஒருடம்பில் நின்று தொழிற்பட்ட உயிர் அந்த உடம்பு எய்த்துக் களைத்துப் போனதால் இறப்பைக் களைப்பு நீக்கத்துக் குரிய உறக்கம் போலவும், உலகியல் அனுபவத்திற்குரிய பிறப்பை உறங்கி எழுவது போலவும் என்று விளக்க,

"உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு" (339)

என்கிறார். உயிர்க்கு இறப்பு என்பது களைப்பாறும் பணியே தவிர அதுவே முடிவன்று. களைப்பு நீங்கிப் புத்துணர்ச்சி யோடு எழுந்து நடமாடுதலே புதிய பிறப்பு. பல்வேறு பிறப்புகளில் உயிர் வளர்ந்து வளர்ந்து முதிர்ச்சியடைந்து வருவதை, உயிரியலில் காண்கின்றோம். சிலரிடத்தில்