பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/196

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

192 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆய்வுக்குரியது. பாண்டியன் அறிவுடைநம்பி அரசன். அவன் கல்வி கற்கும் முயற்சியை, கல்வி கற்பதற்குரிய சாதனங்களை மக்களே அமைத்துக்கொண்டு கற்க வேண்டும் என்று கூறியுள்ளான். பாண்டியன் அறிவுடை நம்பியின் காலம் கி.பி, இரண்டாம் நூற்றாண்டு. அவன் காலத்தில் மக்களை நாற்பாலாகப் பிரித்தல் என்ற அயல் வழக்கு நுழைந்து விட்டதா? அதனால் கீழ்ப்பால் மக்கள், கல்வி உரிமையை இழந்திருந்தார்களா? மேற்பால் மக்கள் வழிவழியின் காரணமாகவும் கற்றுக்கொண்டார்களா? என்பனவெல்லாம் நுணுகி ஆராய்ந்தறியத்தக்க செய்திகள். சங்ககாலப் பெரும் புலவர்கள் தற்செயலாகத் தோன்றி வளர்ந்த தமிழறிஞர்கள் போலும். ஆனால் திருவள்ளுவர் கல்வியை அரசியல் பட்டியலில் சேர்த்துள்ளார். அதனாலேயே ஆட்சியாளர் கல்வி கற்றலும், ஆட்சியின் உறுப்பாகிய குடிமக்களுக்குக் கல்வியைக் கற்பித்தலும் அரசின் நீங்காத கடமை என்று வள்ளுவம் வலியுறுத்துகிறது. குடிமக்களின் அடிப்படை உரிமையாகிய கல்வி உரிமையை வழங்காத அரசு பாரதி காலம் வரை நாடு விடுதலை பெறாத காலம் வரை இருந்திருக்கிறது. பாரதி,

"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆல யம்பதி னாயிரம் நாட்டல்
பின்ன ருள்ள தருமங்கள் யாவும்
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்
அன்ன யாவினும் புண்ணியங் கோடி
ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறி வித்தல்"

(வெள்ளைத்தாமரை 9)

என்ற பாடலில் “ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்” என்று பாடுவது . இக் கருத்தை வலியுறுத்துகிறது. இன்றும் ஏழை பெறும் கல்வி, வாய்ப்பும் வசதியும் உடையவர் பெறும் கல்வி வேறுபட்ட நிலையினதே; தரத்தில் மலையும் மடுவும்போல அமைந்து கிடக்கிறது. நாடு விடுதலை பெற்ற