பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/201

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 197


சான்றாண்மையைத் தமிழக வரலாறு என்றென்றும் போற்றும், தம்மோடு இகல்கொண்டு பொருதியும் பகைத்தும் இடர்விளைவித்த அவர்களையும் உள்ளிட்டு மாபெரும் தலைமையையே தந்த அந்தத் தமிழ்த்தாயின் தலைமகனின் பெயர் சொல்ல இன்று நாட்டில் யாருளர்: ஒருவருமில்லை. திருக்குறள் போரைத் தவிர்க்கிறது. தவிர்க்கும்படி அறிவுறுத்துகிறது. போரின் கொடுமையை எழுத்தில் எழுதமுடியுமா? இரண்டாம் உலகப் போரைப் பற்றி அறிஞர்கள் அடியிற்கண்டவாறு குறிப்பிட்டனர்.

"It has been calculated for example, that the resources swallowed up by the Second World-war were enough for building a fire-room house for each family in the world and also a hospital in each town with a population of every 5000 people and to maintain all these hospitals for ten years. Thus the resources washed on one world war would be enough for medically solving the housing and health problems that today are so acute for the majority of man kind."

- (Fundamentals of Marxism-Leninism. Page 713)

திருக்குறளின் நோக்கம் சமாதானமேயாம் என்பதனை,

‘இகல்என்ப எல்லா உயிர்க்கும் பகல்என்னும்
பண்பின்மை பாரிக்கும் நோய்" (851)

"பகல்கருதிப் பற்றா செயினும் இகல்கருதி
இன்னாசெய் யாமை தலை" (852)

"இகல்என்னும் எவ்வநோய் நீக்கின் தவல்இல்லாத்
தாவில் விளக்கம் தரும்" - (853)

'இன்பத்துள் இன்பம் பயக்கும் இகல்என்னும்
துன்பத்துள் துன்பம் கெடின்" - (854)

என்ற குறள்கள் வாயிலாக அறியலாம்.