பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயன்படாது போகலாம். இது காலத்தைப் பொறுத்தது. அப்பொழுதும் எது செய்யத் தக்கதென்று இயற்கை நுண்ணறிவால் முடிவு செய்யாமல், நூலினைப் படித்து, தொங்கிக்கொண்டிருப்பது முன்னேற்றத்திற்குத் துணைசெய்யாது. இன்றும்கூட, காலத்தின் நடைமுறைகள் மாறியும் அந்த மாற்றங்களைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாது நடைமுறைக்கு ஒவ்வாத, வராத, வர முடியாத, வரக்கூடாத, பழைய நூற்கருத்துக்களின் வழியே நின்றொழுக வேண்டுமென்று வற்புறுத்தி வளரும் சமுதாயத்தைத் தேக்கமடையச் செய்கின்றனர் சிலர். இது கொடுமையிலும் கொடுமை. ஏன்? ஒரு காலச் சூழ்நிலையில் தயாரிக்கப்பெற்ற அறிக்கையை மையமாகக் கொண்டே பின் வளர்ந்துள்ள சமுதாயப் பொருளாதார மாற்றங்களை அறிந்து கொள்ளாமல் ஆணைகள் பிறப்பிக்கப்படுவதை இன்றும் காண்கிறோமே! ஆண்டுக்கு ஆண்டு பணப்புழக்கங்கள் அதிகரித்து விலைவாசிகள் கூடிப் பணத்தின் மதிப்புக் குறைந்தும் வருவதைப் பார்க்கிறோம். ஐந்து ஆண்டுகளுக்கு முன் சராசரி நூறு ரூபாய் வருவாய் பெற்றவன் வாழ்க்கை வசதிகளையுடையவன் என்று கருதப்பெற்றான். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு குறைந்தது நானூறு முதல் ஐந்நூறு ரூபாயாவது வருவாய் பெறுவதுதான் வாழ்க்கை வசதிகளுக்கு உரிய அளவாகும். இத்தகைய நிதியியல் மாற்றங்களை நுனித்தறிய இயற்கையான மதிநுட்பம் தேவை. நூல்கள் பல கற்றாலும் இயற்கையாய் நுண்ணறிவு அமையாது போனால் கற்ற நூலறிவும்கூடச் சிறப்புற்று விளங்குவதில்லை. அவர்கள் கற்ற நூலின் அறிவுக்கு முரண்பட்ட வகையில் அவர்களுடைய உண்மை அறிவு செயற்படும் என்று வள்ளுவம் கூறுகிறது. ஆதலால் நாட்டின் அமைச்சரா வோருக்கு இயற்கையில் அமைந்த நுண்ணறிவு தேவை. அதனால்தான் போலும் மக்களாட்சி முறையில் நாட்டின் அமைச்சராவோருக்கு நூலறிவுத் தகுதி வற்புறுத்தப் பெறுவதில்லை, இயற்கை