பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/207

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 203


நுண்ணறிவே போதும் என்ற எண்ணத்தில் அரசியல் சட்டம் அமைந்திருக்கிறது.

அமைச்சராவோர் அரசுக்கும் குடிமக்களுக்கும் உறுதியான முறையில் அறிவுரை வழங்கிக் குற்றம் வராது காக்க வேண்டும். அமைச்சர், அரசன் அல்லது நாட்டு மக்களுக்குச் சிறு சிறு நயப்புகள் மூலம் மகிழ்வித்துப் பிழைப்பு நடத்தக்கூடாது. தெளிவான, நெடிய நலம் தரத்தக்க உறுதிமொழிகளைக் கூறவேண்டும். அதுவே சிறப்புடைய அமைச்சரின் கடமை என்று வள்ளுவம் கூறுகிறது.

அடுத்து அரசுக்கு இன்றியமையாது வேண்டுவது நட்பு. ஆட்சியில் அமைந்துள்ளோருக்குரிய நட்பு இருவகை; ஒரு நட்பு நாடளவில் தழுவியதாகிய அயல்நாடுகளின் நட்பு. பிறிதொரு நட்பு ஆட்சித் தலைவனுக்குரிய தனியுரிமை நட்பு. இவ்விரு நட்பும் சிறப்புற அமையின் எந்த ஆட்சித் தலைவனும் ஆட்சியைச் சிறப்புற இயற்ற இயலும், நாட்டளவில் நட்பு என்பது பொருள்துறை மாற்றங்கள் அல்லது செல்வப் பெருக்கம் அமைதற்குத் துணை செய்யும். அதாவது ஒரு நாட்டில் உற்பத்தியாகும் பொருள்களை வாங்கிப் பய்ன்படுத்தும் நாடுகள், நாட்டுக்குத் தேவையான பொருள்களை வழங்கி உதவி செய்யும் தகுதியுடைய நாடுகள் ஆகியன நட்புறுப்பு நாடுகளாக அமையவேண்டும். இந்தியாவில் அமைதியாக நடைபெற்றுக்கொண்டிருந்த குடியாட்சி சிதைவதற்குக் காரணமாயிருந்த பி.எல். 480 போன்ற செயல்முறைகளை வற்புறுத்தாத நாடுகளே சிறந்த நட்புறுப்பு நாடுகள், பி. எல். 480 மூலம் இந்த நாட்டின் அரசுக்குத் தொடர்பில்லாமலே தனித்துப் புழங்க உரிமை பெற்ற கோடிக்கணக்கான பணம் இந்த நாட்டின் சிறந்த அரசியல் தலைவர்களைத் தேர்தலில் தோற்கடிக்கவும் நாட்டின் அரசியற் கட்சிகளைப் பிரிவினைப் படுத்திப் பல குழுக்கள் தோற்றுவிக்கவும் பயன்பட்டிருக்கிறது. அவற்றின் விளைவே இன்றைய சீரழிவு. அதுமட்டுமா? நம்முடைய