பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/212

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

208 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நட்பு. அதுவே சிறந்த நட்புச் செய்யும் உதவி. நட்பு என்பது வள்ளுவத்தின் பார்வையில் ஒரு தலைமகனுக்கு மிகமிக நெருக்கமான உள் சுற்றத்தில் அமைகிறது. ஆங்கு நிகழும் பொருளியல் எடுப்புகளும், வைப்புகளும் கொள்ளுதலும், கொடுத்தலும் ஆகியன உரிமைச் சுற்றம்போல் நிகழ்வன. அவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் பெறுவதில்லை. தட்புச் செய்யப்பெறும் ஒருவனுக்கு அவனுடைய இலட்சியம் மிக்க வாழ்க்கையில் எதிர்ப்படும் இடர்ப்பாடுகளில் அவனுக்குத் துணையாய் அமைவதே நட்பின் தலையாய கடமையும் ஒழுக்கமும் ஆகும். கட்டியிருக்கும் ஆடை இறுக்கம் தளர்ந்து நெகிழ்கிறது. இங்ஙனம் நெகிழ்தல் இயற்கை. யல்வினைகளின் காரணமாக உடல் உறுப்புகள் அசைவதால் உடை நெகிழ்தல் தவிர்க்க இயலாதது. மிக இறுக்கமாகக் கட்டுதல் உடல் நலத்திற்கு உரியதன்று. உடலுயிர் வாழ்க்கைக்கு இன்றியமையாத ஒழுக்கம் என்ற ஆடையை உயிர் உடுத்துக்கொள்கிறது. பலருடன் தொடர்பு கொண்டு பல்வேறு செயல்களில் ஈடுபடும் வாழ்க்கையில் ஒரோவழி நன்னோக்கத்தின் காரணமாகக்கூட ஒழுக்க நெகிழ்வுகள் ஏற்படுதல் உண்டு. வள்ளுவமே ஒரோவழி ஒழுக்க நெகிழ்வுகளை ஒழுக்க அமைதியாக ஏற்றுக் கொள்வன்த எண்ணுக. "வாய்மையே ஒழுக்கம்” பொய்ம்மை ஒழுக்கமாகாது. ஆனாலும் வாழும் சமுதாயத்தின் சூழ்நிலை, பணிசெய்யப்படுவோரின் மனப்பாங்கு ஆகிய சூழ்நிலைகளில் பொய்ம்மையும்கூட வாய்மையாகக் கருதப்பெறும் என்ற ஒழுக்க அமைதியின் அருமைப்பாடு சமுதாய இயல் அறிந்தோர்க்கு விளங்கும். ஒழுக்க நெறிகள் ஏற்றுப் போற்றப்பட வேண்டியவை. ஆனாலும் சமுதாயத்தின் இயல்பான முன்னேற்றத்திற்கு அவை ஒரோவழி தடையாக அமையுமாயின் நெகிழ்ந்து கொடுத்து எடுத்தணைப்பது இன்றியமையாதது. மக்களுக்காக ஒழுக்கமே தவிர ஒழுக்கத்திற்காக மக்கள் அல்ல. இடையில் கட்டிய ஆடை