பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/216

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

212 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



நாட்டொடு நாட்டை இணைத்து மேலே
 
ஏறு...................................

.......................................

அறிவை விரிவு செய்! அகண்ட மாக்கு

விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை!
 
அணைந்து கொள்! உனைச் சங்கமாக்கு

மானிட சமுத்திரமே நானென்று கூவு!

பிறப்பிலே எங்கும் பேத மில்லை

உலகம் உண்ண உடுத்த உடுப்பாய்

புகல்வேன்! உடைமை மக்களுக்குப் பொது
 
புவியை நடத்து பொருவில் நடத்து

(பாரதிதாசன் கவிதைகள் 1 தொகுதி ப 54)


என்பது பாரதிதாசன் பாடல்.


ஆதலால் ஒழுக்கம் என்பது தன்னுடைய நாட்டொடு தன்னோடு வாழ்கின்ற மக்களோடு இசைந்து வாழ்தலே ஒழுக்க நெறியாகும். உடலுறுப்புகளின் பசியம் தோன்றத் தான் செய்யும். இது மாறாத இயற்கைநியதி. இவைகளை வைத்து மட்டும் குடிமக்கள் தரத்தினை உரிமைகளை நிர்ணயித்தல் கூடாது. வளரும் காலத்திற்கேற்ப அந்தக் காலச் சூழ்நிலைகளுக்கு இசைந்த அறிவும் உணர்வும் ஒழுக்க அமைவும் உணர்ந்திருக்கிறதா என்று ஆராயவேண்டாமா? முடியாட்சி துன்பம் விளைவித்ததை உணர்ந்து குடியாட்சி அமைத்த பிறகு குடியாட்சியின் தலைவராக வந்து அமர்வோர் பலர் முன்னிலையில் முடி சூடிக்கொள்ளும் நிகழ்ச்சிகள் நடத்தலும், முடியாட்சி மன்னர்களைப்போல மக்கள் மன்றத்தில் நடந்துகொள்ளுதலும் இவர்கள், தாம் வாழும் காலத்திற்கிசைந்தவாறு வளர்ச்சியடையவில்லை என்பதைப் புலப்படுத்தவில்லையா? ஆத்லால் நாட்டு மக்களோடு அவர்கள் உரிமைகளுக்கெல்லாம் தான் ஒப்புறுதியளித்துப் பாதுகாப்பளிக்கத்தக்க வகையில் வாழவேண்டும்.