பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/261

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 257



இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி, ஒரு பரிபூரண மக்களாட்சி முறையை ஏற்றுக் கொண்டிருக்கின்றோம். மக்களாட்சி முறைப்படி ஒவ்வொரு மனிதனுக்கும் சிந்திக்கவும் கருதவும் உரிமை உண்டு. அவ்வழி, அஃதாவது, கருத்து வேறுபாடுகளின் காரணமாகக் காழ்ப்பும் பகையும் காட்டுதல் கூடாது. அவ்வழி, கலகங்களும் தோன்றக் கூடாது. மக்களாட்சி முறை நிலவும் நாட்டில் கருத்து மாற்றம், மனமாற்ற முயற்சிகள் நடை பெற வேண்டுமே ஒழிய, பகைவழி முயற்சிகள் கூடாது.

மூன்றாவதாக, இந்நாடு கூட்டுக் குடும்ப அமைப் புடையது. இந்நாட்டின் உடைமைகள் அனைவர்க்கும் பொதுவுடைமை. இந்நாட்டின் செல்வ வாழ்வு சமநிலை உடையதாக இருக்க வேண்டும். எல்லாரும் எல்லா நலன்களும் பெற்று வாழும் சமநிலைச் சமுதாய அமைப்பை நாம் விரும்பி மேற்கொள்ள வேண்டும். இந்த மூன்று தலையாய ஒழுக்கங்களும் இன்றைய பாரத நாட்டின் நாட்டொழுக்கங்கள். இவ்வொழுக்கங்களை மனப்பூர்வமாக ஏற்று ஒழுகுபவர்களே திருவள்ளுவர் கருத்துப்படி இந்நாட்டின் உண்மையான குடிமக்கள் ஆவார்கள்.

நிலத்தியல்பு

திருக்குறள் ஒரு வாழ்க்கை நூல். கனவிலும், கற்பனையிலும் திளைக்கும் வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் ஒதுக்கித் தள்ளுகிறது. மேலும், திருக்குறள் உணர்ச்சியைத் தொடுகிறது - தூண்டுகிறது - தூண்டி வளர்க்கிறது. எனினும், உணர்ச்சிகளால் மட்டும் நடத்தப் பெறும் வாழ்க்கை இயலை - வாழ்க்கைப் போக்கைத் திருக்குறள் மறுக்கிறது. இன்ப வேட்கை கொண்டு நடத்துகிற வாழ்க்கைய்ை விடத் துன்பங்களால் தொடரப்பெற்ற வாழ்க்கையாயினும் நெறிமுறைப் பட்டதாக - வளர்ச்சி