பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/265

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 261


படைத்துக் கொடுக்கின்றன. ஆகவே அழுக்காற்றுக் குணத்தைக் கற்றுக் கொடுத்த சுற்றம் கெடும் என வள்ளுவர் கூறுகிறார்.

மேலும், ஒருவன் தன்னுடைய சுற்றத்திற்குத் தேவையாக இருக்கக் கூடும். என்ற எண்ணத்தில் அழுக்காறு கொள்கிறான். அந்த அழுக்காற்றுக்கும் காரணமாக இந்தச் சுற்றம் இருப்பதால் திருவள்ளுவர் சுற்றம் கெடும் என்று சொல்கிறார். ஆதலால் ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வாழும் ஆர்வம் தனி மனிதனுக்குத் தேவையாக இருந்தாலுங்கூட, ஒழுக்க நெறிகளை, இளமையிலேயே படைத்துத் தருவது அவனுடைய சுற்றமேயாகும் என்பது தெளிவாகிறது. ஆதலால்,

"கொடுப்ப தழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதுரஉம்
உண்பதூஉம் இன்றிக் கெடும்" (166)

திருவள்ளுவர் கூறுகின்றார்.


அழுக்காற்றை அகற்ற வழி


னித வாழ்க்கையின் சிறப்பியல்கள் உணர்வுகளாலும் குணங்களாலும் அமைவனவேயாம். பல கற்கள் ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கப் பெறுவதால் சுவர் எழுந்து வீடு உருவாகிறது. அவ்வீட்டின் நிழல் வாழ்வதற்கு இனிமையாக இருக்கிறது: பாதுகாப்பாக இருக்கிறது; அமைதியும் அளிக்கிறது. அதுபோல, பல்வேறு வகைப்பட்ட நல் உணர்வுகளாலும், குணங்களாலும் வளர்ந்த மனிதர்களின் வாழ்க்கை சமுதாயம் என்ற கட்டிடத்தை எழுப்புகிறது. அவ்வாறமைந்த சமுதாய அமைப்பு இனிய அமைதி கலந்த வாழ்க்கை அமைப்பைச் சமுதாயத்திற்குத் தருகிறது. நற்குணங்களிலும்கூட ஒன்றிலிருந்து தொடர்ச்சியாகப் பல நற்குணங்களை வளர்க்கிற தாய்மை நிலையுடைய நற்குண முண்டு. அழுக்காறாமை, அதாவது பொறாமைப்