பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/276

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தன்னுடைய இழப்புக்காக அழுகிறாள். அவளோடு அழும் மற்றவர்கள் இழக்கக்கூடாத ஒன்றை இழக்காமல் இருப்பதற்காக அழுகிறார்கள். அந்த ஒன்றுதான் சமுதாய உணர்ச்சி என்பது. ஒருவன் பலரைத் துன்புறுத்தும் வழியில் வெளவிப் பொருள்களைச் சேர்ப்பானாயின் அப்பொருள் களைச் சமுதாய நீதியென்ற பெயரில் திரும்ப அவனிட மிருந்து எடுத்துக்கொள்ள சமுதாயத்திற்கு உரிமையுண்டு. அங்ங்ன மெடுத்தல் வெளவுதலன்று என்ற குறிப்பில் நன்பொருள் வெஃகின் என்று கூறினாரோ என்பது ஆய்ந்து உணரத்தக்கது.

புறஞ்சொல்லும் புன்மை

திருக்குறள் நடைமுறை வாழ்வியலின் விளைவுகளை விளக்கும் நூல். குற்றங்களையும் குணங்களையும் அவற்றின் காரண காரியங்களையும் தெளிவாக விளக்கி வழிகாட்டுகிறது. அதுமட்டுமன்று. ஒன்றின் முழுத்தன்மையையும் அளந்து காட்டுவதில் திருக்குறள் மிகச் சிறந்து விளங்குகிறது. மனித சமுதாயத்தில் ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பகை. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தல்-புறங்கூறி வாழ்தலின் மூலம் பொய் பெருகுகிறது. பகை வளர்கிறது; நட்பு கெடுகிறது; நல்லவை தேய்கிறது; அல்லவை பெருகுகிறது. புறங்கூறுதலைவிட மோசமான குணக்கேடு பிறிதொன்றில்லை என்று ஒழுக்க நூலார் வரையறுத்துக் காட்டுகின்றனர். புறங்கூறுதல் வெறுப்பை வளர்க்கிறது. வெறுப்பு வேற்றுமைகளை விளைவிக்கிறது - வேற்றுமைகள் பிரிவினைகளை உண்டாக்குகின்றன! என்று குவாரில்ஸ் என்ற மேனாட்டு அறிஞர் கூறுகிறார்.

மனித இயலும், திருவருட் சிந்தனையும் இல்லாத மனிதர்கள் தீமைகலைளத் தோண்டி எடுக்கிறார்கள். அத்தீமைகளை உதட்டில் தாங்கிப் பகை என்னும் பெரு