பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/279

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 275


முழுவதையும் காட்டுவதும் இல்லை. நமது தலைமுறைக் கவியரசு கவிஞர் கண்ண தாசன் அவர்கள்,

சொல்லில் வருவது பாதி-நெஞ்சில்
தூங்கிக் கிடப்பது மீதி

என்று குறிப்பிடுகிறார். அறநெஞ்சுடையார் குற்ற முடையோரைக் கூட எளிதில் பகைக்க மாட்டார்கள். காரணம், குற்றத்தைத் திருத்தமுடியும் என்று நம்புவார்கள். அதற்குரிய வழி வகைகளைக் கண்டு முயற்சிப்பார்கள், அறநெஞ்சுடையார்க்குக் குற்றத்தின் மீது வெறுப்பு இருக்குமேயன்றிக் குற்றமுடையார் மாட்டு வெறுப் பிருக்காது. அவனுடைய மனம் அறவழிப்பட்டதன்று. அவனுக்கு அறம் தெரியவே தெரியாது. அவன் மனம் தீது. கருதியது முடிக்க அறம் சொல்லிக்கொள்வது போலக் காட்டுகின்றான் என்று திருக்குறள் விளக்குகிறது. நீரில் நெருப்பிருக்காது என்பது போலப் புறம் சொல்லும் புன்மையவரிடத்து அறம் இருக்காது -- இருக்கமுடியாது என்பதை யுணர்ந்து வாழ வேண்டும். புறம்கூறும் பழக்கத் தினின்றும் நம்மை விலக்கிக் கொள்ள வேண்டும். அதனைக் கேட்கும் பழக்கத்தையும் கைவிட வேண்டும்.

"அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்." (185)
தீது உண்டோ?

னித உலகத்தின் விழைவு. இன்பமேயாம். உலகத்து இயற்கையும் இன்பமேயாம். இங்ஙனம் கூறுவது "இன்னாதம்ம இவ்வுலகம்" என்று முன்னோர் மொழிந்த கூற்றுக்கு முரணாகாதா? இயற்கை என்பது மாற்ற முடியாதது ஒன்றேயாம். மாற்றுதலுக்கும், மாறுதலுக்கும் உரியன எல்லாம் இயற்கையாகா. அவை ஒருவாறு செயற்கை யேயாம். அதனாலேயே “இன்னாதம்ம இவ்வுலகம்" என்று