பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/280

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

276 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மொழிந்தவர் அதனைத் தொடர்ந்து "இனிய காண்க” என்று ஆணையிட்டார்.

இன்னாதன எனக் கருதத் தக்கவை பெரும்பாலும் முறைகேடான தன்னலச் சார்புகளிலும், தற்சலுகைகளிலுமே தோன்றுகின்றன. முறைகேடான தன்னலச் சார்பு என்பது பிறர்க்குத் தீங்குகளைத் தந்து அவ்வழி தன்னலமாக விளங்குபவையாகும். ஆதலால் ஒரு தனி மனிதனிடத்தில் திடீரென்று குற்றங்கள் தோன்றிவிடா. அந்தக் குற்றங்களைத் தோற்றுவிப்பவர்கள்- - குற்றங்கள் தோன்றுவதற்கு உரியவாறு வாழுகிறவர்கள் தங்களுடைய குற்றங்களை எண்ணிப் பார்க்காமல் தங்களுடைய குற்றங்களின் காரணமாகப் பிறரிடம் தோன்றும் குற்றங்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறார்கள். காவிரியைத் தஞ்சையிலும் பார்க்கிறோம். திருச்சியிலும் பார்க்கிறோம். அதனால், காவிரி தஞ்சையிலோ திருச்சியிலோ தோன்றுகிறது என்று சொல்ல முடியாது. அது குடகு மலையில், தோன்றியே தஞ்சையையும், திருச்சியையும் வந்து சேர்ந்தது. அது போலவே குற்றங்களுக்குரிய காரணங்கள் தோன்றும் இடம் வேறு. குற்றங்கள் விளங்கிப் புலனாகின்ற இடம் வேறு.

உண்மையை ஒத்துக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள் பொய்யைத் தோற்றுவிக்கிறார்கள். நியாயமான உரிமைகளை ஏற்று வழங்காதவர்கள் பொய்யினைத் தோற்றுவிக்கிறார்கள்: மற்றவர்களுடைய மன உணர்ச்சிகளை மதித்து உடன்படவோ அல்லது மாற்றலோ சக்தி அற்றவர்கள் ஒடுக்கம் கொள்கையின் மூலம் பொய்யினைத் தோற்றுவிக் கிறார்கள். இவறிக் கூட்டிச் செல்வம் சேர்ப்பவர்கள் -- செல்வத்தின் பயனை மறைப்பதின் மூலம் கள்வர்களைத் தோற்றுவிக்கிறார்கள். அழிபசி தீர்க்கும் பொருள் வைப்புழித் தெரியாத புல்லறிவாளர்கள் களவினைத் தோற்றுவிக்கிறார்கள். மற்றவர்கள் அன்றாட வாழ்வுக்கே வறுமையில் ஆழ்ந்து அவல்ப்படும் பொழுது வளம்பல படைத்து ஆடம்பரமாக