பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/304

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

300 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்பனவாகும். அவற்றுள் நடுவனதாகிய பொருள் எய்த இருதலையும் எய்தும் என்பது தமிழ்நூல் முடிபு. அதனாலன்றோ திருவள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்று முப்பால் நூல் செய்தார். வீடு பற்றி அவர் தனி இயல் அமைக்கவில்லை. காரணம், அறம், பொருள், இன்பம் ஆகியவை மனிதன்முயன்று செய்யக் கூடியவை - பெறக் கூடியவை. ஆனால் வீடு, அறம் பொருள் இன்பத்தை முறையாகச் செய்து அனுபவித்து வெற்றி பெற்றவர்களுக்கு இறைவனால் வழங்கப் பெறுவது. வாழும் மனிதர்க்கே திருவள்ளுவர் நூல் செய்தமையின் காரணமாக, வீடு பற்றிய தனிவியல் அமைக்கவில்லை. எனினும் ஒரோ வழி குறிப்பிட்டுள்ளார்.

திருவள்ளுவர் ஒரு பொருளியல்துறை அறிஞர். பொருளின் தோற்றத்திற்குரிய நிலைக்களனான பாதுகாத்தல், பங்கீடு ஆகியவைபற்றித் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார். பொருளில்லையானால், உலகியல் இல்லை என்று கூறுகிறார். வறட்சித் தன்மையுடைய மாயா வாதம், பெளத்தம், சமணம் ஆகிய சமயக் கருத்துக்கள் தமிழகத்தில் ஊடுருவத் தொடங்கியபிறகுதான் தமிழர் வாழ்வியல் கெட்டது: வாணிகம் வீழ்ந்தது. ஆட்சி அந்நியர் கைக்கு மாறியது. இந்த நிலையினை உணர்ந்த தமிழக சிவ நெறிச் சான்றோர்களாகிய மாணிக்கவாசகர், அப்பரடிகள், சுந்தரர் போன்றோர் பொருளின் மேம்பாட்டினை வலியுறுத்தினர். "முனிவரும் மன்னரும் முன்னுவ பொன்னால் முடியும்" என்பது மாணிக்கவாசகரின் வாக்கு, "ஏரி நிறைந்தனைய செல்வம் கண்டாய்" என்றும், "பொன்னானாய், மணியானாய்" என்றும் அப்பரடிகள் பாடுகின்றார். சுந்தரர் வாழ்க்கைக்கு இறைவன் பொற்காசு வழங்கியதைச் சேக்கிழார் சிந்தை இனிக்கப் பாடுகின்றார்.

பொருள் உலகியலின் அச்சு; அதை வைத்தே உலகியல் நடைபெறுகிறது. திருவள்ளுவர் பொருளைப் போற்ற