பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/310

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

306 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



'கடமையை விருப்பத்தோடு செய்பவர்களுக்குக் கடவுள் எப்பொழுதும் உதவியாக இருக்கிறார்' என்று கெய்லரும்.

கடமையைச் செய்யாமல் தட்டிக் கழித்தல் அறிவையும் மனத்தையும் பலவீனப்படுத்தித் துய்மையான திவ வாழ்க்கையைப் புதைத்து விடுகிறது என்று ட்ரயான் எட்வர்ட்ஸ் என்பாரும்,

'உயிர்கள் தம்முடைய கடமைகளை உடனடியாகச் செய்வதாக முடிவெடுத்துக் கொள்வது கடவுள் இதயத்தின் சந்நிதி' என்று பேகனும் பேசியிருக்கின்றனர்.

பக்திச் சுவை நனி சொட்டச் சொட்ட சான்றோர்களின் வரலாற்றை நமக்கு அருளிய சேக்கிழார் பெருமானும் தவம் என்ற வாழ்க்கையை உலகியல் வாழ்க்கையோடு இணைத்துக் கூறுவதை நூல் முழுவதும் பரக்கக் காணலாம். சங்கிலியாருக்குச் சுந்தரரைச் சிவபெருமான் அறிமுகப்படுத்தும்போது, "மேருவரையின் மேம்பட்ட தவத்தினான்" என்று கூறுவதாக சேக்கிழார் பெருமான் சித்திரித்திருப்பது அறிந் தின்புறத்தக்கது.

ஆதலால், திருக்குறள் காட்டும் தவம், தத்தம் கடமைகளைச் செய்தல்; அவம் கடமைகளைச் செய்யாதொழித்துப் பிறவற்றைச் செய்தல்.

காரணம் என்ன?

ந்த உலகில் செல்வந்தர்கள் மிகச் சிலரே உள்ளனர். வறியவர்கள் பலர். இந்த அவல நிலை ஏன்? உலகு தொடங்கிய நாள்தொட்டு, எல்லாரும் செல்வந்தர்களாகவே விரும்புகின்றனர்; முயலுகின்றனர். சிலருக்கே வெற்றி கிடைக்கிறது. பலர் தோல்வியடைகின்றனர். இந்த வெற்றி