பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/314

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

310 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருக்குறளைக் கீழ்க்கண்டவாறு இணைத்துப் பொருள் கொண்டு சிந்திக்கவும்.

"இவர்பலர் ஆகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்.”

(270)

இக்குறட்பாவில், "நோற்பார் சிலர்” என்று ஒரு பகுதியும், "பலர் நோலாதவர் இலர் பலர்" என்றும் கொண்டு கூட்டிப் பொருள் காணுதல் சாலும். குறட்பாவில் இலர் வெளிப்படையாகச் சொல்லப் பெற்றுள்ளது. உடைமை உய்த்துணர்விக்கப் பெற்றுள்ளது. நோற்பார் என்றும், சிலர் என்றும் இருப்பதால், நோற்பாண்ர உயர்வு கருதிய ஒருமையாக ஏற்றுக் கொண்டு பொருள் காணுதல் வேண்டும். அவ்வழி நோற்பாரும் சிலரும் ஒருவரேயல்லர்; நோற்பார் வேறு; சிலர் வேறு. நோலாதவர் வேறு; பலர் வேறு. உலகியலுங்கூட ஒரு மனிதனுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனைச் சார்ந்த சமுதாயம் பொறுப்புள்ளதாகிறது என்ற வழக்கின் அடிப்படையையும் இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.

மேற்கண்ட உரை துறவியலில் வரும் தவம் என்ற அதிகாரத்திற்குப் பொருந்துமோ என்ற ஐயப்பாடு சிலருக்குத் தோன்றலாம். பொருந்தும் - முக்காலும் பொருந்தும் என்பதே நம்முடைய கருத்து. 'தவம்' ஒழுக்கத்தின் முதற்படி. பொருட் பற்று நீங்குதலேயாம். அதனால், பொருந்தும். தவமுடையார்க்குப் பொருள் ஏது என்ற வினா எழலாம். தவமுடையார் தாமே நேரில் பொருள் ஈட்டாது போனாலும், அவர் தம் தவத்தினால் கவர்ச்சிக்கப்பட்டவர்கள் - நன்மைகளைப் பெற்றவர்கள் காணிக்கை தருவார்கள். அங்ஙனம், சாதாரண மக்களும் மன்னர்களும் கூடத் தந்துள்ளனர் என்பதை நமது நாட்டு வரலாறே பேசுகின்றது. அவ்வழித் தோன்றியவையே அறநிலையங்களும், திருமடங்களும். அங்ஙனம் தரும்பொழுது, அவற்றையும் வழங்கிப்