பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/34

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


நல்லொழுக்கம் வளர வேண்டுமென்றால் அரசியலில் ஒழுக்கம் இருக்க வேண்டும். திருக்குறள் கூறும் ஆட்சிமுறை மக்களாட்சி முறையேயாகும். திருக்குறள் தோன்றிய காலத்தில் அரசுகள் இருந்தும் குடியாட்சி முறை தழுவிய முடியாட்சியைத்தான் அது கூறுகிறது. இம்முடியாட்சியில் குடியாட்சிக்குரிய தன்மைகளையே கூறுகிறது. இதனை,

  "குடிதழீஇக் கோலோச்சும் மாநில மன்னன்  
   அடிதழீஇ திற்கும் உலகு" (544) 
  "இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் 
   கெடுப்பா ரிலானும் கெடும்" (448) 

என்ற திருக்குறள்களால் அறியலாம். திருக்குறள் தோன்றிய காலத்தில் முடியாட்சி யிருந்தமையால் திருவள்ளுவர் இங்ஙனம் கூறினார். எனவே, திருக்குறள் நெறியில் அரசியல் அமைப்பு, குடியாட்சியமைப்பேயாம். வரலாற்றுப் போக்கில் உலக அரங்கில் முடியாட்சிகள் சடசடவெனச் சரிந்து விட்டன.

திருக்குறள் நெறி வழி அமையும் குடியாட்சி, முறையில் மட்டுமே குடியாட்சியாக இருக்காது. உண்மையிலேயே உணர்வாலும் மிகச் சிறந்த குடியாட்சியாக அமையும். இன்றைய குடியாட்சி முறையில் மக்களிடமிருந்து வாக்குகள் வாங்கப்படுகின்றன; மக்கள் வாக்களிப்பவராக வளர்க்கப் பெறவில்லை. இன்றைய குடியாட்சி முறையில் - குறிப்பாகத் தேர்தல் முறையில் சாதி, மதம், பணம் ஆகியவை செய்யும் அராஜகங்கள் எழுதிக் காட்ட முடியாதவை. திருக்குறள் ஆட்சியமைப்பில் தேர்தல்களில் சாதி, மதம், பணம் ஆகியவற்றின் ஆதிக்கங்கள் ஒழிக்கப் பெறும்; வாக்களிப்பதென்பது கட்டாயக் கடமையாக்கப்பெறும். தேர்தல் ஆணைக்குழு முழுச் சுதந்திரமுடைய தன்னாட்சியமைப்பாக இயங்கும். வேட்பாளர்களின் தேர்தல் செலவை, தேர்தல் ஆணைக்குழுவே ஏற்கும். அரசியற் கட்சிகளின் தோற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் மிகச் சிறந்த ஒழுங்கியல்முறை