பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/391

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 387


முன்னும் கிடக்கும் கடமைகளை விட்டு விட்டுப் பரிசு கிடைக்கும் கனவுலகத்திற்கு அழைத்துச் சென்றுவிடும். கனவில் பரிசு கிடைக்கும். பரிசுக்குரிய திட்டங்கள் தீட்டப்படும். கனவு கலைந்து நினைவுலகத்திற்கு வரும் பொழுது கூட அந்தக் கனவினுடைய சக்தி பரிசு கிடைத்துவிடும் என்பதை உறுதிப்படுத்தி உணர்வுகளைக்கெடுத்துக் கடமைகளைச் செய்யவொட்டாது தடுக்கும். ஆனால் பரிசோ விழவில்லை. இங்கோ வேலையும் கெட்டது. மீண்டும் மீளா வறுமை! ஆதலால் கனவு இம்மியும் நெடிய பயனைத் தராது; நிலைத்த பயனைத் தராது; வாழ்க்கையின் அனுபவத்திற்கு எதையும் கொண்டுவந்து சேர்க்காது. அதனாலன்றோ வள்ளுவம், ‘கனவுந்தான் கண்டபொழுதே இனிது’ என்று கூறுகிறது. அதாவது, கனவு கண்ட நேரத்திற்கே - அதுவும் உணர்ச்சிக்கு மட்டும் இன்பம். மற்றபடி யாதொரு பயனுமில்லை. இதனை,

"நனவினாற் கண்டதூஉ மாங்கே கனவுந்தான்

பொழுதே இனிது"

(1215)

என்ற குறளால் உணரலாம்.

குறளில் குடும்பக் கட்டுப்பாடு!

ன்று நாடு தழுவிய குடும்ப நலத்திட்டம் பேசப்பெறுகிறது; செயற்படுத்தப்பெற்று வருகிறது. செயற்கை முறையில் குடும்பத்தின் எண்ணிக்கை உயராமல் தடுத்து நிறுத்த அரசு ஆன முயற்சியெல்லாம் செய்து வருகிறது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த திருவள்ளுவர் இந்தக் குடும்ப நலத்திட்டத்தைப் பற்றிப் பேசியுள்ளார். ஆனால், அவர் முறை மிகமிக உயர்ந்தது. உள்ளத்திற்கு வலிமை. தரவல்லது உடல் நலத்தினைப் பேணத்தக்கது. ஆராக் காதலை அனுபவிக்கச் செய்வது; அன்பினைப் பெருக்கி வளர்ப்பது.