பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/42

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2



வள்ளுவர் நெறி

திருவள்ளுவர் ஒரு பிறவிச் சிந்தனையாளர். திருவள்ளுவர் மனித குலத்தின் மேம்பாட்டுக்காகவே திருக்குறளை இயற்றினார். திருக்குறள் தோற்றத்திற்குரிய களம், அந்தக்காலச் சமுதாய அமைப்பு முறையேயாம். திருக்குறள் தோன்றிய காலம் பொற்காலம் அல்ல. தமிழின வாழ்வியல் செப்பமாக இல்லை. ஏன்? உலக மாந்தரினமே சிறப்புடன் வாழாத காலம் அது. அதனால் மனித சமூகம் சிறப்புடன் வளர, வாழத் திருவள்ளுவர் வழிகாட்ட விரும்பினார்.

திருவள்ளுவர் காலத்திலேயே கடவுள்கள் பலர் வழிபடு பொருளாயினர். சிந்தனையில் சிறந்த வழிபாடு இல்லாமல் ஆரவாரத் தன்மையுடைய சடங்குகள் அதிகமாயின. கடவுள் வழிபாடு பொறி, புலன்களைப் பக்குவப் படுத்துதற்குரியது. ஆனால், திருவள்ளுவர் காலத்திலிருந்து இன்றளவும் கடவுள் வழிபாட்டில் சிந்தனை ஒன்றியிருத்தல் முதலியனவற்றிற்குப் பதிலாக எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் ஆசை, அகந்தை, தீனி ஆகியவற்றிற்குரியனவாக வழிபாட்டு முறைகள்