பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/53

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 49


வாழ்க்கைக் கடமைகளைப் பொறுப்புணர்வுடன் இயற்ற வேண்டும். இது திருவள்ளுவர் காட்டும் வாழ்க்கை முறை.

திருக்குறள், இல்லறத்திற்கு முதன்மை கொடுத்தாலும் துறவறத்தை ஒதுக்கவில்லை. இல்லறத்தின் முடிவுநிலையில் துறவைக் கூறுகின்றாரா? தனித்துறவைக் கூறுகின்றாரா? இது ஆய்வுக்குரியதாகவே விளங்குகிறது. ஆனால், ஓர் உண்மை உணரப்படுதல் வேண்டும். ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் துறவும் கலந்திருத்தல் வேண்டும். துறவைத் தொடர்ந்து துய்ப்பு. இயற்கை, அன்பின் பிணைப்பும் அர்ப்பணிப்புணர்வுமாய் விளங்கும் தன்மையது. ஏன் பிறந்தோம்? வளர்ந்தோம்? வாழ்ந்தோம்? வீடு கட்டியாச்சு; சொத்துச் சேர்த்தாச்சு; பிள்ளை குட்டிகள் பெற்றாச்சு! இவை மட்டுமல்ல இல்லறம்! புகழ் பெற வேண்டும். நல்ல குறிக்கோளுடன் நாட்டின் வரலாற்றுடன், சமுதாயத்துடன் இணைந்த செயற்பாடுகளால் புகழ் கிடைக்கும். புகழ்மிக்க வாழ்க்கை எளிதில் அமையாது.

புகழ் புரியும் வாழ்க்கைத் திசையில் அடியெடுத்து வைக்கும் பொழுதெலாம் நம்முடைய ஊழ் தலை காட்டும். அதாவது, முன்னேற்றத்துக்குத் தடையான நமது பழக்க வழக்கங்கள், நாம் வாழும் சமுதாயத்தின் சூழலாக உருவாகும். அல்லது, எடுத்துக்கொள்ளும் பழக்கவழக்கங்கள் தடையாக அமையும். இவைகளை எதிர்த்து நின்று பழக்கம் தவிரப் பழகினால்தான் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம். புகழ் பூத்து வாழலாம்; வரலாற்றில் இடம் பெறலாம்.

இன்று, திருவள்ளுவர் திருநாள்! எப்படி வாழ்வது? சிந்தனை செய்க! வள்ளுவம் காட்டும் வழியில் வையத்துள் வாழ்வாங்கு வாழ்க!.

மதுரை வானொலி ஒலிபரப்பு: 16,195

இன்று திருவள்ளுவர் திருநாள். திருவள்ளுவ்ர் மனிதன் மனிதனாக வாழ அருளிச் செய்தது திருக்குறள். வாழ்தல் தி.4.