பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆசைப்படுவர். அறிவறிந்த ஆள்வினை இயற்றி அடையக் கூடியனவற்றை அடைய ஆசைப்பட மாட்டார்கள். கடின உழைப்பு என்பது அவர்கள் கனவிலும் கருதாதது. இத்தகையோர் வாழ்க்கையில் பெறவேண்டியவைகளைப் பெற இயலாதுபோதல் இயற்கையே! ஆனாலும் அவர்கள் தங்களை நொந்து கொள்ளமாட்டார்கள். தாங்கள்தான் தங்களுடைய இழிநிலைக்குக் காரணம் என்பதையும் உணர மாட்டார்கள். உணர்த்தினாலும் உணர மாட்டார்கள். அவர்கள் நன்றாக வாழ்பவர்களையும் கடவுளையும் விதியையும் காரணங்காட்டி நொந்து கொள்வார்கள்; பழி துற்றுவார்கள்.

மேலும் அழுக்காறுடையவர்க்குத் தன்னம்பிக்கையும் இருப்பதில்லை. தாழ்வு மனப்பான்மை யுடையவராகவும் அல்லது தாழ்வு மனப்பான்மை வழி வளர்ந்து பொய்ம்மை நடிப்பும் உடைய உயர்வு மனப்பான்மை யுடையவராகவும் உருவாகலாம். இதனால் மற்றவர்களைப் போல் இவர் வளர முடியாது, வாழ முடியாது என்ற முடிவுக்கு வந்து விடுவர். ஆயினும் தன்குறையை மறைக்க, பேறு பெற்றாரின் வாழ்க்கையில் குற்றங்களைக் காண்பர். பிறர் வாழ்க்கையில் குற்றங்களைக் காணுதல் என்ற இயல்பு, குற்றங்களைச் சுமந்து திரியும் இழிபிறவிகளுக்கே உண்டு. அதனால் அறிவும் ஆள்வினையும் அறியாதான் - வாழ்வாங்கு வாழும் முறையறியாதான் தன் இழிவினை மறைத்துக்கொள்ள அழுக்காற்றின் வழி குற்றமே துாற்றித் திரிவான். அழுக்காறு இலாது வாழ அறிவறிந்த ஆள்வினை வாழ்வு தேவை. முயற்சியும் உழைப்பும் தேவை. பழகும் பாங்கறிந்து பழகும் இயல்பே வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாகத் தகுதியல்லாதனவற்றை அடைய விரும்பாத மனப்பான்மை அல்லது துறவு மனப்பான்மை வேண்டும். தகுதி வழி உரிமை இல்லாத ஒன்றை அடைய விரும்புவோர் பழி பாவம், ஏளனம் ஆகியவற்றை அடைந்து ஆராத் துயரத்தில் ஆழ்வர் என்பதை மாணிக்கவாசகர்,