பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/74

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

70 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்றார். திருக்குறள் உழைத்து வாழ்வதையே வாழ்வு என்று வலியுறுத்துகின்றது.

“பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்
தாள்வினை இன்மை பழி”

(618)

என்பதறிக.

ஊழ்த் தத்துவத்திற்குத் திருவள்ளுவர் உடன்பட்டவர். ஆயினும் ஊழின் வலிமையை-ஊழின் வழியது வாழ்க்கை யமைவு என்பதைத் திருவள்ளுவர் உடன்படவில்லை. ஊழை வெற்றி பெறலாம் என்பதே திருவள்ளுவர் கண்ட முடிவு. இது, தமிழகத்தில் வழி வழியாக வற்புறுத்திக் கொண்டு வந்த ஊழை, மறுத்துக் கூறிய புதுமையாகும்.

     “ஊழையும் உப்பக்கம் காண்பர் உலைவின்றித்
     தாழாது உஞற்று பவர்”

(620)

இடைவிடாது சோர்வின்றி உழைப்பது உழைப்பு என்று உழைப்பிற்குரிய இலக்கணம் வகுக்கின்றார் திருவள்ளுவர். அது மட்டுமா? உழைப்பில் தவமும் திறமும் நாள்தோறும் குறையாமல் வளர வேண்டும் என்பதைத் தாழாது உஞற்றுதல் என்று கூறியதன் மூலம் விளக்கிக் கூறுகின்றார்.

வாழ்க்கை பொருள்களால் ஆகியது. உடலோடு கூடிய உயிர் வாழ்க்கை வாழ்வதற்குப் பொருள் இன்றியமையாதது. திருவள்ளுவர் கருத்துப்படி பொருள் என்றால் உண்ணும் உணவு, மருந்து முதலிய நுகர்பொருள்களேயாம்.

     “அருள் இல்லார்க்கு அவ்வுலக மில்லை; பொருளில்லார்க்கு
     இவ்வுலகம் இல்லாகி யாங்கு”

(247)

என்றார். இந்த உலகத்தில் உண்பனவும் தின்பனவும் கிடைக்காதவர்கள் வாழ்தல் அரிது. அதுபோலவே யார் மாட்டும் அன்பு காட்டி ஒழுகாதவர் சமுதாயத்தால் விரும்பப்பட மாட்டார்கள். இங்கு “அவ்வுலகம்” என்பதற்கு