பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் ☆ 75


மெளரிய சாம்ராஜ்யத்தை நிறுவியவர். சாணக்கியரின் அரசியல், பொருளியல் மிகவும் சிறந்தவை. ஆயினும் இவர் கூறும் சிற்றரசியல் பேரரசியல் இரண்டும் குறையுடையனவேயாம். சாணக்கியரின் அரசு, அப்பட்டமான முடியாட்சியேதான்! எனினும், பல கோணங்களில் திருக்குறளுடன் ஒத்திருக்கிறது. சில வேறுபாடுகளும் உண்டு. சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்திலும் அரசனுடைய அதிகாரம் அல்லது அரசு நடைமுறை அமைச்சர்களின் ஆலோசனைப்படியே நடக்க வேண்டும் என்று கூறுகின்றார். அமைச்சரின் உதவி பெற்றுத்தான் அரசு நடைபெறுதல் சாத்தியம். அரசன் மந்திரிகளை நியமித்து அவர்களுடைய அபிப்பிராயத்தைக் கேட்க வேண்டும் என்பது சாணக்கியரின் வாக்கு. அவர் அரசனது அன்றாடப் பணிகளை முறைப்படுத்தித் தந்திருக்கின்றார். இதைத் திருவள்ளுவர் செய்யவில்லை. காரணம் சாணக்கியரின் அர்த்தசாஸ்திரம் சாத்திரம் மட்டுமல்ல. நடைமுறையும் வகுத்துத் தந்தது. திருக்குறள் அரசியல் சாத்திரம் மட்டுமேயாம்.

ஒரு நாளில்

காலை 6–00 – 7–30 நாட்டினர் வரவு செலவுகளைக் கவனித்தல்
காலை 7–30 – 9–00 மக்களைக் காணல்
காலை 9–30 அரசனின் தனது பணிகளும் நூல்கள்
படித்தலும்
முற்பகல் 10-30 - 12-00 அதிகாரிகளுடன் சேர்ந்து நிர்வாகக்
காரியங்களைக் கவனித்தல்
பகல் 12-00 - 1-30 மந்திரிசபைக் குறிப்புகளைக் கவனித்தல்
-ஒற்றர்களிடம் செய்தியறிதல்