பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பகல் 1–30 – 3–00 பொழுதுபோக்கு (விருப்பம் - போல்)
பிற்பகல் 3-00 - 4-30 படைகளைப் பார்வையிடல்
பிற்பகல் 4–30 – 6-00 படைத் தலைவர்களுடன் ஆலோசித்தல்
- பின் தனது கடமைகள்
மாலை 6–00 – 7–30 ஒற்றர்களுடன்
இரவு 7–30 – 9–00 தனது கடமைகள்
இரவு 9–00 – 1–30 ஓய்வு
இரவு 1-30 - 3-00 சாத்திரம் படித்தல் மறுநாட் பணி பற்றிச்
சிந்தித்தல்
3-00 - 4-30 ஒற்றர்களுக்கு ஆணையிடுதல்
4–30 புரோகிதர், ஆசாரியர் ஆகியோருடன் பேசுதல்:
ஆஸ்தான வைத்தியன், ஜோசியன் இவர்களைக்
கண்டு கொள்ளல்; மடைப் பள்ளித் தலைவனுடன்
பேசுதல்; பசுவை வலம் வருதல்.

அரசன் எப்போதும் சான்றோர் சேர்க்கையில் இருக்க வேண்டும். அறிவை வளர்த்துக் கொள்ளுதல் வேண்டும் என்று கூறுகின்றார். சாணக்கியர் கண்டது. மெளரிய சாம்ராஜ்ய ஏகாதிபத்தியம் என்றாலும் அவர் காலத்திலும் குடி அரசுகள் பல இருந்தன.

சாணக்கியர் அரசனுடைய கடமைகளில் ஒன்றாக நீர்நிலைகளைப் பேணுதலைக் குறிப்பிடுகின்றார்; ஒரு அரசு நிலைத்திருக்க வேண்டுமானால் பொருள் வலிமை பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார்.