பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/96

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


ஆம்! உண்மை! நமது சொந்த அனுபவமும் கூட! நாம் என்னதான் பரிவு காட்டினாலும் குடும்பத்தையே கட்டி வளைத்துச் சோறு போட்டாலும்கூட, ஆயிரம் தடவை புத்திமதி சொன்னாலும்கூட கேட்காமல் குடித்துச் சீரழிபவர்கள் பலர்! சின்னத்தனங்களும் அராஜகங்களும் செய்தல், நன்றி மறத்தல், பிறருடைய பொறுமையை - மன்னிக்கும் மனப்போக்கை அலட்சியமாக - பயந்தாங்கொள்ளித் தனமாக நினைத்தல் ஆகிய தீய பழக்கங்களிலிருந்து மீள முடியாமல் தவிப்பவர் பலர். திருவள்ளுவரே விரக்தியுடன்,

"ஏவவும் செய்கலான் தான்தேறான் அவ்வுயிர்

போஒம் அளவும்ஒர் நோய்"
(848)

என்று சொல்லக்கூடிய அளவுக்குக் கயவர்கள் வாழ்ந்திருக்கின்றனர்; வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இத்தகு கயவர்கள் "கரும்புபோல் கொல்லவே பயன்படுவர்" என்பது திருவள்ளுவர் கருத்து. கயவர்கள் தம்மைச் சில காசுகளுக்கு விற்றுவிட்டு விவஸ்தையின்றி நன்றிகெட்ட செயல்களைச் செய்வர்.

அண்மைக் காலமாக நமது நாட்டில் இந்தக் கயமைக் கூட்டம் பெருகி வளர்ந்து வருகிறது என்பது உண்மை. கயமைக் கூட்டத்தை அறவே ஒழித்தால்தான் வீட்டில் அமைதி, உலகில் அமைதி. இந்தப் பணி எப்போது நடக்கும்: