பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/97

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
6


திருக்குறள் நெறி சார்ந்த அறிவியல்


திருக்குறள் வாழ்வியல் சார்ந்த ஓர் அறிவியல் நூல். திருக்குறள் "கண்டது மட்டுமே உண்மை; அனுபவம் மட்டுமே உண்மை” என்று கூறும் அரை வேக்காட்டு நூல் அன்று. திருவள்ளுவரின் அறிவு, அறிவிற்கு அவர் கூறும் இலக்கணங்களுடன் நூற்றுக்கு நூறு பொருந்தும்: "நுண்ணறிவும் திருவள்ளுவருக்கே உரிமை உடையது. எந்த ஒரு கொள்கையையும் ஆழ்ந்து ஆய்வு செய்து ஐயத்திற் கிடமின்றித் தெரிவிக்கின்றார் திருவள்ளுவர்.

உயிர், உள்பொருள். உயிர் படைப்புப் பொருளன்று. மன்னுதல் என்றால் நிலை பெறுதல் என்பது பொருள். அதாவது அழியாமை. உயிர்கள் தோன்றியனவுமல்ல; அழிவனவுமல்ல. உயிர்கள் படைக்கப்பட்டனவுமல்ல; அழிக்கப்படக் கூடியனவுமல்ல. இதனைத் திருவள்ளுவர்,

"தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயி ரெல்லாம் தொழும்” (268)

என்பதால் அறியலாம். மன்னுயிர் - நிலையான உயிர் என்பது கருத்து. அடுத்து, நாம் இருப்பது மட்டும் உண்மையல்ல. மற்றவர்களும் வாழ்கிறார்கள் என்பதும் உண்மை. ஏன்? எண்ணற்ற உயிர்கள் வாழ்கின்றன. ஆதலால் உயிர்