பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

13

 தான் மட்டும் வாழ வேண்டும் என்பது சிலரின் பிரார்த்தனை! இல்லை, அது பிரார்த்தனை அல்ல, பேராசை! ஊரோடு கூடி வாழ்வதுதான் உண்மையான பிரார்த்தனை! அடிகள் பெருமான் பின்வருமாறு பிரார்த்திக்கின்றார்.

தனிமனிதன் என்ற நஞ்சிலிருந்துதானே தனி உடைமை பிறந்தது. தனி உடைமை உணர்வினால்தானே களவும், காவலும், பூட்டும், சாவியும், போரும் இன்றி வாழ்ந்த பொதுமை நம்மிடமில்லை. சமுதாயத்தைச் சீரழித்து விட்டது! ஏராளமான பிரிவினைகள்! பிரிவினை உணர்வுகளால் ஏற்படும் மோதல்களின் பயன் வறுமை நிறைந்த சமுதாயம். ஆதலால், தனிமனிதனாக வாழலாம் என்ற தன்னல நயப்பிலிருந்து விடுதலை பெறப் பலரோடு கூடி வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பலர் கூடித் தொழில் செய்வதன் மூலம் செல்வம் பெருகும்; தண்ணளி ஊற்றெடுக்கும். கூடி வாழப் பிரார்த்திக்கும் பிரார்த்தனை நம் ஆழ் மனதைத் தொடுகின்றது. தனக்கு இரண்டுகண் கெட்டாலும் எதிரிக்கு ஒருகண் கெடவேண்டும் என்ற பிரார்த்தனை தான்! (வஞ்சனை) மலிந்து காணப்படுகின்றது. ஜேம்ஸ் ஆலனின் சிந்தனைகள் போல் தமிழ்வழியில் 'திருவருட் சிந்தனை' நமக்குக் கிடைத்த அற்புதக் கருவூலம் ஆகும்.

“நமது நிலையில் சமயம் சமுதாயம்” என்ற நூல் சமயத்தைப் பற்றிய சமூகப் பார்வை. சமயம் தன்னைச் சுற்றி இரும்பு வேலி எழுப்பிக் கொண்டு மனிதர் அண்ட முடியா மதமாக இருக்கின்ற பொழுதுதான், இரும்பு வேலியை அடித்து நொறுக்கிச் சமயத்தை மக்களுக்குரியதாக மாற்றுகின்ற மாபெரும் புனருத்தாரணப் பணிதான் 'நமது நிலையில் சமயம் சமுதாயம்’ என்ற நூல்.

"தீண்டாமை விலக்குப் பணியைப் பாராளுமன்றத்தின் ஆணைகள் செய்த அளவுக்குக் கூட நமது வழிபடு கடவுளின்