பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

15

இறைவன் ஜீவிக்கவில்லை. இறைவனுக்கு இருக்கின்ற சில குணங்கள். சில இயல்புகள்தான் காரணம். தாம் வாழ்வதை விட, மற்றவர்கள் வாழ்வது பெரிது என்று நினைக்க வேண்டும். அப்படி வாழ்கின்ற வாழ்க்கைதான் பெரிய வாழ்க்கை. அந்த மாதிரி சாதனையை மனிதனும் முயன்றால் செய்ய முடியும் என்று மனிதத்தைத் தெய்வமாக்க வழி காட்டுகின்றார்கள்.

“உலக அரங்கத்தில் மிகப் பெரிய சமூக மறுமலர்ச்சியை உருவாக்க முனைந்த சாக்ரட்டிஸ் நஞ்சு கொடுத்துச் சாகடிக்கப்பட்டார். ஏழாம் நூற்றாண்டில் தமிழ் மண்ணில் மிகப் பெரிய சமய சமுதாய மறுமலர்ச்சியை உருவாக்கிய அப்பரடிகளுக்கும் நஞ்சு கொடுக்கப்பட்டது. நஞ்சு உண்ட சாக்ரட்டிஸ் மடிந்து போனதுபோல் நஞ்சு உண்ட நாவுக்கரசு பெருமான் சாகவில்லை. நஞ்சு உண்டும் உயிர் வாழ்ந்தார். நஞ்சு உண்டும் வாழுகின்ற கலையை அப்பர் பெருமான் யாரிடம் கற்றார் என்ற வினாவினை எழுப்பி அதற்குரிய விடையை அடிகள் பெருமான் தருகின்றார்.

நஞ்சு உண்டும் வாழுகின்ற கலையைத் திருவள்ளுவப் பெருமான் கற்றுத் தந்தார்.

"பெயக்கண்டும் நஞ்சுஉண்டு அமைவர்; நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர்”

என்று நஞ்சு உண்டும் வாழும் கலையை வள்ளுவப் பெருமான் போதிக்கின்றார். எல்லோருக்கும் நன்மை விரும்பும் உள்ளமுடையோரின் “உடலில் ஓடும் செங்குருதிக்கு நஞ்சை முறிக்கும் ஆற்றல் உண்டு” என்கிறார்கள்.

“ஆலயங்கள் சமுதாய மையங்கள்” என்ற நூல் தமிழக அரசு விருது பெற்ற நூல், “கோயிலைத் தழுவிய குடிகள்: குடிகளைத் தழுவிய கோயில்” என்ற அருள்நெறித் தந்தையின் தாரக மந்திரத்தை நடைமுறைப்படுத்துவதாக உள்ளது. கல்லெல்லாம் பேசும் பொற்சிலைகளாக உருமாறிய