பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/143

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

139


மேற்றிசை நாட்டு அறிஞர்கள், “அச்சத்திலிருந்துதான் சமயம் பிறந்தது; கடவுட் கருத்துத் தோன்றியது” என்று கூறியுள்ளனர். அதாவது ஆதிமனிதன் கல்லில் இடித்துக் கொண்டான்; அவனுக்குத் துன்பம் ஏற்பட்டது. துன்பத்திற்கு அஞ்சியவன், துன்பத்திற்குக் காரணமாயிருந்த கல்லையே தொழத் தொடங்கிவிட்டான் என்று கூறியுள்ளனர். மேற்றிசை நாட்டைப் பொறுத்த வரையில் இக்கருத்து பொருத்தமானதாக இருக்கலாம். அதாவது ஐரோப்பிய சமய நாகரிகத்திற்கு அடித்தளம் அச்சம் பயம் என்று சொல்லலாம்.

ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் ஐரோப்பிய இனத்தைவிடச் சற்று வளர்ந்தவர்கள். இவர்கள் நிலம், நீர், தீ, வளி, விண் ஆகிய இயற்கைப் பூதங்களால் அவ்வப்பொழுது விளைந்த தீமைகன்ளைக்கண்டு அஞ்சி அவற்றையே ஆற்றல் வாய்ந்தவை எனவும் எண்ணித் தொழுதனர்.

இன்று மனித உலக வரலாறு ஐம்பூதங்களை வென்று விளங்கும் விஞ்ஞானத்தில் வளர்ந்து கொண்டிருப்பதால் இவ்வழிபாடு சிறுபிள்ளை விளையாட்டாகிவிடுகிறது.

அடுத்தது, திராவிடர் நாகரிகம் என்றும் தமிழர் நாகரிகம் என்றும் வரலாற்றறிஞர்களால் பேசப் பெறும் நாகரிகம். தமிழர், அச்சத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. பயத்தின் காரணமாகவும் வழிபடவில்லை. அவர்கள் தொன்மைக் காலத்திலேயே எந்த ஒன்றையும் அறிவியல் முறையில் அணுகும் உணர்வை இயல்பாகவே பெற்றிருந்தனனர். அவர்களுடைய சமய நெறி தோன்றியதற்குரிய களம், அறிவு, இன்பம், அமைதி அவாவும் நிலைகளேயாகும்.

தமிழினத்தின் சிந்தனையின் பயனாக, சிந்தனைத் தெளிவின் பயனாக, அறிவின் ஆக்கமாகத் தோன்றியதே சிவநெறி. மனிதர்குல வாழ்க்கையில் படைப்பின் நிறைவின்மையையும் அறிவு எல்லையைக் காண முடியாமையையும் கண்டுணர்ந்தபோது, எல்லை கடந்து