பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/153

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

1479


ஆனாலும் சிந்துவெளி நாகரிக காலம் தொட்டு, மெய் கண்டார் காலம் வரை தோன்றிய அனைத்து நூல்களிலும் சிவன் மூன்று கண்களையுடையவன் என்பது இடையறாது பயிலப்பட்டு வந்துள்ளது.

தமிழக வரலாற்றின் பொற்காலம் சங்ககாலமாகும். சங்க கால இலக்கியங்களில் சிவநெறிக் கருத்துக்கள் பரவிக் கிடக்கின்றன. சிவபெருமானின் செயல்முறைப் பண்பாட்டால் அமைந்த பிறிதொரு பெயர், “திருநீல கண்டம்”. அதாவது “நீலமணி மிடறு” என்பது. அமரர்களுக்கு வாழ்வளிப்பதற்காக நஞ்சு உண்டமையால் தோன்றியது “நீலமணி மிடறு” என்பது. இதனை நினைவு கூர்ந்து ஒளவையார் அதியமான் நெடுமானஞ்சியைப் பாராட்டும் பொழுது,

பால்புரை பிறைநுதற் பொலிந்த சென்னி
நீல மணிமிடற்று ஒருவன்போல
மன்னுக பெரும நீயே...

(புறம், 91: 5-7)

என்று பாடுகின்றார். மற்றும் சங்க கால இலக்கியங்கள் எல்லாவற்றிலுமே சிவநெறி ஏற்றிப் போற்றப் பெற்றுள்ளது.

காப்பியக் காலத்தில் இளங்கோவடிகள் சிவநெறியை ஏற்றிப் போற்றியுள்ளார். கவுந்தியடிகள் வாயிலாக, இளங்கோவடிகள் கூறும் கொள்கைகளை வைத்து, இளங்கோவடிகளைச் சமணர் என்று பலர் கூறிக் கொண்டிருக்கின்றனர். எந்தச் சமயமாயினும் அவர் அந்தச் சமய நெறியின் உயர் கொள்கைகளைத் தழுவுதல் வேண்டியும், சமயப் பொறை நோக்கியுமே கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அதனால் அவரது சமயமே சமணம் என்று துணிதல் ஏற்புடையதன்று. இளங்கோவடிகள், நிறைந்த சமயப் பொறையுடையவர். தெளிவாகச் சொன்னால் சமய நெறிகளைக் கடந்த பொதுமை நெறி மேற்கொண்டவர் என்றே பாராட்டத் தோன்றுகிறது. அவர் தம் நூலில் எந்தெந்தச்