பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/155

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

151


சிவபிரான் திருக்கோயிலையே முதல் நிலையில் வைத்துக் கூறுகின்றார்.

பிறவா யாக்கைப் பெரியோன் கோயிலும்
அறுமுகச் செய்வேள் அணிதிகழ் கோயிலும்
வால்வளை மேனி வாலியோன் கோயிலும்
நீலமேனி நெடியோன் கோயிலும்...

(சிலப். இந்திரவிழவூரெடுத்த காதை 169-172)

என்றும்,

நுதல்விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவணச் சேவல் உயர்த்தோன் நியமமும்
மேழிவலன் உயர்த்த வெள்ளை நகரமும்
கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும்

(சிலப் ஊர்காண் காதை : 7-10)

என்றும் கூறுதல் அறியத்தக்கது. சைவத்துக்கேயுரிய சிறப்பு “பிறவாயாக்கைப் பெரியோன்” என்பது. சைவ நெறியின் கடவுள் செத்துப் பிறக்கும் தொழிலுக்கு ஆட்படாதவன்; பிறவாதவன்; இறவாதவன்.

யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வ மாகிஆங்கே
மாதொரு பாகனார்தாம் வருவர்மற் றத்தெய்வங்கள்
வேதனைப்படும் இறக்கும் பிறக்குமேல் வினையும் செய்யும்
ஆதலால் இவையிலாதான் அறிந்தருள் செய்வ னன்றே

(சிவஞான சித்தியார், 115)

எல்லார் பிறப்பும் இறப்பும்இயற் பாவலர்தம்
சொல்லால் தெளிந்தேநம் சோணேசர்-இல்லில்
பிறந்தகதை யும்கேளேம் பேருலகில் வாழ்ந்துண்டு
இறந்தகதை யும்கேட்டி லேம்.

(அருணகிரியந்தாதி)