பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/156

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

152

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


என்ற திருப்பாடல்களின் பொருள் அறிக. இந்தச் சிறப்பை இளங்கோவடிகள் எடுத்துப் பாராட்டுவதன் மூலம் அவருடைய சிவநெறிச் சார்பு அறியத்தக்கது.

மணிமேகலை ஆசிரியர் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனார்,

நுதல்விழி நாட்டத்து இறையோன் முதலாப்
பதிவாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறாக

(மணவிழாவறை காதை : 54-55)

என்று சிவபிரான் திருக்கோயிலை முதன்மைப்படுத்திக் கூறுகிறார். -

அடுத்து, செங்குட்டுவன் வடபுலப் படையெடுப்புக்குப் புறப்படும்பொழுது, நெடுமாலின் திருச்சேடத்தைக் கொண்டு வந்து, நின்று சிலர் தொழ, சிவபெருமானது திரு வடிகளைத் தன் மணிமுடியின் மீது வைத்திருந்தமையால், அத் திருச்சேடத்தை வாங்கித் தனது புயத்தில், ஏற்றுக் கொண்டதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

ஆடக மாடத்து அறிதுயில் அமர்ந்தோன்
சேடங் கொண்டு சிலர்நின்று ஏத்தத்
தெண்ணீர் கரந்த செஞ்சடைக் கடவுள்
வண்ணச் சேவடி மணிமுடி வைத்தலின்
ஆங்குஅது வாங்கி அணிமணிப் புயத்துத்
தாங்கினன்..............

(சிலப். கால்கோள் காதை 62-67)

இந்த முறை வைப்பு சிறப்புடைய மரபினை மையமாகக் கொண்டதன்றோ?

அடுத்து, தமிழகத்துச் சைவ நெறியின் பொற்காலம் எனப் போற்றக்கூடிய காலம், திருமுறைக் காலம். திருமுறைக் காலம் என்பது மிக நீண்ட காலம் கி.பி. ஏழாம் நூற்றாண்டு தொடக்க முதல் கி.பி.1150 வரையாகும். இந்த நூற்றாண்டு இடைவெளி, தமிழகத்தின் வரலாற்றைக் கிளர்ச்சித்