பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/157

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

153


தன்மையுடையதாக்கிய சமய எழுச்சிக் காலம். சமயப் பொறை கருதி, பல்வேறு சமய நெறியாளர்கள் தமிழ்நாட்டில் உலாவவும் வாழவும் அவர்களுடைய சமயக் கொள்கைகளை, பாராட்டியும் ஏற்புடையவற்றை ஏற்றுக் கொண்டுமே தமிழர்கள் வாழ்ந்தனர்.

ஆயினும் பெளத்த, சமண நெறியாளர்கள் சமயப் பொறையை இழந்து தர்க்கித்தல், சழக்கிடுதல், மதம் மாற்றுதல், தம் நெறி சாராதவரைத் துன்புறுத்தல் ஆகிய செயல்களை மேற்கொண்டு சைவ நெறியாளர்களுக்கும் ஊறுவிளைவித்தனர். தமிழர்கள் இயல்பில் சமயப்பொறை யுடையவர்களாக இருந்தனர். இதற்குச் சான்று, அப்பரடிகள் சைவத்திலிருந்து சமணத்திற்குச் சென்றபொழுது யாரும் தடுக்கவில்லை; கிளர்ச்சி செய்யவில்லை. ஆனால், சமணத்திலிருந்து சைவத்திற்கு அப்பரடிகள் திரும்பி வந்த பொழுது, சமணர்கள் மதம் மாறிய பல்லவ அரசனின் துணையுடன் அப்பருக்குத் தந்த தொல்லைகளே சான்று.

அதுபோலத்தான் மதம் மாறிய பாண்டிய அரசன் நெடுமாறன் துணையுடன் திருஞானசம்பந்தர் தங்கியிருந்த திருமடத்துக்குத் தீ வைத்ததுமாகும். திருஞானசம்பந்தரோடு பலமுனைகளில் வாதாடியது, பேராடியது ஆகியவற்றின் மூலம் இதனை அறிய முடிகிறது. இந்தச் சூழலில்தான் ஒரு சைவப்படை யெழுச்சியே நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சமயத் தொண்டர்கள் அப்பரடிகள், திருஞானசம்பந்தர் ஆகியோருடைய அடிச்சுவட்டில் தொண்டு செய்தனர் திருத்தொண்டுகள் இயற்றினர்.

இன்று நம்மிடையே வழக்கத்திலிருக்கும் சைவ நெறியின் பழக்கங்கள் எல்லாம் அவர்களால் காக்கப்பெற்று நமக்கு அளிக்கப் பெற்றவையேயாம். இதனை,

“சொற்கோவும் தோணிபுரத் தோன்றலும் சுந்தரனும்
சிற்கோல வாவூர்த் தேசிகனும்-முற்கோலி