பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/163

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

159


புரிசேர் கடற்புவி போற்றவைத் தேன்அன்பு பூண்டிதனைத்
திரிசேர் விளக்கெனக் காப்பார்பொற் பாதம்என் சென்னியதே.

(தென்காசிக் கோயில் கல்வெட்டு)

பாண்டியப் பேரரசில் சோழர் குலத்தில் தோன்றிய மங்கையர்க்கரசியாரின் கணவனாக இருந்து சமணத்துக்குச் சென்று, பின் சிவநெறிக்கு மீண்டு, சிவநெறி வரலாற்றுக்குப் பெருநலம் சேர்த்தவன் நின்றசீர் நெடுமாறன். அவன் புகழ், ஞாலம் உள்ளளவும் நிலைத்து நிற்கும்.

நெடுமாறனின் வாழ்க்கைத்துணையாக நின்ற மங்கயைர்க்கரசியாரின் புகழ், பண்ணும் இசையும் பயிலும் காலம் வரையில், தமிழினம் இயற்கையோடிசைந்த வாழ்க்கை வாழும் காலம் வரையில், ஆணும் பெண்ணும் காதலிற் கலந்து வாழும் மனையறம், மண்ணில் நிலவும் வரையில் நிலைத்து நிற்கும்; அந்த மங்கையர்க்குத் தனியாசி, தமிழர்தம் இல்லங்களில் தெய்வமாக வழிபடப் பெறுவார்.

சேரமன்னர்களில் சிறந்து விளங்கிய பேராசர் சேரமான் பெருமாள் நாயனார். இவர் நாள்தோறும் வழுவாது சிவ பூசை செய்த மன்னர். அதுமட்டுமா? பூசையின் பயனை நாள்தோறும் பெருமான் ஏற்றுக் கொண்டு, அருள் செய்த பெரும் பேறுபெற்ற மன்னர், திருநீற்றுச் சாதனத்தை மேற்கொண்டவர்கள் யாராயினும் அவரை மதித்தவர் சிவபெருமானால் சுந்தரருக்குத் தோழராக்கப் பெற்ற அண்ணல், இங்ஙனம் சேர அரசர்களிலும் போாசர்கள் பலர் சிவநெறியில் நின்றொழுகிச் சைவத்தை வளர்த்து வந்துள்ளனர்.

இங்ஙனம் வளர்ந்து வந்த சிவநெறி, பெளத்த, சமண, மாயாவாத சமயங்களைச் சந்திக்க வேண்டிய இன்றியமையாமை ஏற்பட்டது. அப்பொழுது இலக்கியங்களில் பரவிக்