பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/178

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“as the Choicest product of the Dravidian intellect.”
“This System possesses the merits of great antiquity; in the religious world it is heir to all that is most ancient in Southern India. It is a religion of the Tamil people by the side of which other every form is of Comperatively foreign origin. As a System of religious thought as an expression of faith and life, the Saiva Siddhants is by far the best that South India possesses; indeed it would not be rash to include the whole of India and to maintain that judged by its intrinsic merits, the Siddhants represents the high water mark of Indian thought and Indian life.” என்று பாராட்டியுள்ளார்.

இந்தச் சைவ சித்தாந்தச் செந்நெறியைத் தந்த முதல் நூலாகிய சிவஞானபோதத்திலிருந்து சில வழி நூல்கள் விலகிச் சென்றிருக்கின்றன; இது உண்மை. வழிநூலாசிரியர்கள் வாழ்ந்த காலத்தில் சமுதாய அமைப்பும், நடைமுறைகளும், அவர்களைப் பாதிப்புக்குள்ளாக்கி இருக்கின்றன. நெருக்கடியைத் தந்து-காலச் சூழ்நிலைக்கும் கட்டுப்பட்டுத் தள்ளியிருக்கின்றன. சமுதாய நெருக்கடிகள் அல்லது பழக்கக் கொடுமைகள், சிறந்த அறிஞர்களைக் கூட பாதிப்புக் குள்ளாக்கித் தம் வழி நிறுத்த முயன்று வெற்றி பெற்றதுண்டு. வரலாற்றில் இங்ஙனம் தோற்ற அறிஞர்களின் எண்ணிக்கை மிகுதி, வெற்றிபெற்றவர்கள் மிகமிகச் சிலரே. உண்மையின் பக்கத்திலேயே நின்று வழக்காடி-முரட்டுத் தனமாக உலகியலிற்குப் பலியானவர்கள் ஒரு சிலரேயாம்.

திருக்குறள், திருமுறைகள், மெய்கண்ட தேவர் அருளிச் செய்த சிவஞான போதம் ஆகியவை உண்மையின் பக்கமே நின்ற நூல்கள். காலத்தைவென்று விளங்கும் நூல்கள். சித்தாந்தச் செந்நெறி ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குப் பிறகு வளரவில்லை; தத்துவச் செழிப்பிலும் வளரவில்லை; தேக்கம்தான். ஏன்? உயிர்ப்புள்ள வாழ்வுக்கெல்லாம் உயிராக அந்நெறி நின்றோர், பிறழாது பிழைப்பு நடத்தியதால்தான்