பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

202

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தகுதிகளே வழிபாட்டின் பயன்களாகின்றன. அத்தகுதிகள் அல்லது பயன்கள் தப்பாது வந்து சார்வதற்குத் துணை நிற்பது இறைவனின் நியதி.

மனம் அல்லது மனத்தின் செயற்பாட்டுக்குத் துணை நிற்கும் உறுப்புக்களாகிய சிந்தனை, புத்தி ஆகியன சிறந்த முறையில் தொழிற்பட, புலன்கள் துணை செய்கின்றன. உயிரைச் செழுமைப்படுத்தும் வாயில்கள் முறையே பொறிகள், புலன்கள், சித்தம், புத்தி, மனம் என்ற படிமுறையில் அமைந்துள்ளன. இவை தம்முள் ஒன்றுக் கொன்று முரண்படாமல் உயிரை நலப்படுத்தும் உயரிய நோக்கத்தொடு முரண்பாடின்றி நன்னெறியில் தொழிற்படும் பொழுது, உயிர் ஆக்கத்தினை எய்துகிறது; சிறப்புறுகிறது; இன்புறுகிறது. இவைகளுக்கிடையே ஒரோ வழி மாறுபாடுகள் ஏற்படும் பொழுது அவ்வாழ்க்கை குறையும் நிறையும் கலந்ததாக அமைந்து விடுகிறது. அங்ஙனம் நிகழாமல் தடுக்க ஒன்றினை ஒன்று உணர்த்திக் கொள்ளுதலும் உண்டு. அந்த உணர்வுகள் பயன்பட்டுத் திருத்தமுறுவதும் உண்டு; திருத்தமுறாமல் போவதும் உண்டு. இத்தகைய சிறந்த செயற் பாடுகளுக்குரிய வாழ்க்கை நெறியில் எப்பொழுதும் விழிப்புத் தேவை; நன்று எது? தீது ஏது? என்று பகுத்தாராய்ந்து எடுத்துக் கொள்ளும் பாங்கு தேவை.

நல்லதன் நலனும் தீயதன் தீமையும்
இல்லையென் போர்க்கு இனனா கிலியர்

(புறம் - 29; 11-12)

என்பதறிக. உடலும் பொறிகளும் எப்பொழுதும் தற்சார்பு இயல்பின; சுகத்தை நாடும் இயல்பின; உயிர் நலத்தைப் பற்றிக் கவலைப்படாமல்கூடத் தொந்தரவு செய்வன. இவைகள் நன்மையைத் தீமையாகவும், தீமையை நன்மையாகவும்கூடக் காட்டும்; உணரச்செய்யும். அவைகளை யெல்லாம் நுண்ணிதின் ஆராய்ந்து தெளிந்து எவை உயிரின்