பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/210

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

206

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பயன்தாரா. அன்பினால் தவறு செய்தாலும் நிறையாகும். அன்பில்லாமல் அறமே செய்தாலும் பாவமாகும்.

தரிப்பித்தலின் நீதரு மம்தரிப் பித்திடாமை
தெரிப்பிக்கும் அதன்மம்எனப் பெயர்செய்யு மால்எம்
பொருட்டுப்புரி பாவமும் புண்ணியமாக்கி எம்பால்
விருப்பற்றவர் செய்அற மும்மறமாக்கு விப்பாய்

(காஞ்சிப்புராணம் : பாடல் 77 தழுவக்குழைந்த படலம்)

என்று காஞ்சிப்புராணம் பேசும்.

திருக்களிற்றுப்படியார்,

அன்பேஎன் அன்பேஎன்று அன்பால் அழுதரற்றி
அன்பேஅன் பாக அறிவழியும்-அன்பன்றித்
தீர்த்தம் தியானம் சிவார்ச்சனைகள் செய்யுமவை
சாற்றும் பழமன்றே தான்.

(திருக்களிற்றுப் – 55)

என்று பாடல் உணர்த்துகிறது.

சிவகோசரியார் இயற்றிய விதிமுறைப் பூசையினும் கண்ணப்பர் பூசை ஏன் சிறப்புற்றது? அன்பினால் அன்றோ! கண்ணப்பருக்கு முன்பு அன்பு உவமையாக இருந்தது. கண்ணப்பருக்குப் பிறகு கண்ணப்பர் அன்புக்கு உவமையாகி விட்டார். அதனாலன்றோ ஞானத்தின் திருவுருமாகிய ஞானசம்பந்தர் அன்பின் பிழம்பாகிய கண்ணப்பர் சந்நிதியில் “கும்பிட்ட பயன் காண்பார் போல” வீழ்ந்தெழுந்தார். இதனைச் சேச்கிழாரடிகள்,

தாழ்ந்தெழுந்து திருமலையைத் தொழுதுகொண்டே தடஞ்சிலா
தலசோப னத்தால் ஏறி
வாழ்ந்திமையோர் குழாம் நெருங்கு மணிநீள் வாயில்
மருங்கிறைஞ்சி உள்புகுந்து வளர்பொற் கோயில்