பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/218

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

214

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பாகுபடுத்தும் சாதிமுறைகள் இருந்ததில்லை. ஆனால், தொழில்முறைப் பாகுபாடு இருந்திருக்கிறது. தொல்காப்பியத்தை அடியொட்டித் தோன்றிய தமிழ் மறையாகிய திருக்குறளிலும் சாதி வேற்றுமை இல்லை.

பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும்
(திருக்குறள் 972)

என்பது திருக்குறள். அதனையொட்டித் தோன்றிய சமயத் திருமுறைகளும் சாதி வேற்றுமைகளைக் கடுமையாகக் கடிந்துள்ளன. மாணிக்கவாசகர்,

சாதி, குலம், பிறப்பு என்னும் சுழி
(திருவாசகம் 5)

என்று கூறுவது அறிக. அப்பரடிகள்,

சாத்திரம் பல பேசும் சழக்கர்காள்
கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்

(அடங்கன் முறை : ஐந்தாம் திரு - 582)

என்று சாதி வேற்றுமை மனப்பான்மையைக் கடுமையாகக் கண்டித்ததோடு உயிர்க்குலம் அனைத்தையும் சிவமெனக் கருதிப் போற்ற வேண்டும் என்று அருளியுள்ளமையும் அறிக. ஞானத்தின் திருவுருவாக, நான்மறையின் தனித் துணையாக, தமிழகத்தில் சைவத் தமிழ் ஞானப் புரட்சி செய்த திருஞானசம்பந்தர்,

எங்கேனும் யாதாகிப் பிறந்திடினும் தன்அடியார்க்கு
இங்கேஎன்று அருள்புரியும் எம்பெருமான் எருதேறிக்
கொங்கேயும் மலர்ச்சோலைக் குளிர்பிரம புரத்துறையும்
சங்கேயொத்து ஒளிர்மேனிச் சங்கரன்தன் தன்மைகளே

(அடங்கன்முறை : இரண்டாம் திரு - 1900)

என்றருளிய பாடலும்

குலவ ராகக்குல மிலரு மாகக் குணம் புகழுங்கால்
உலகின் நல்லகதி பெறுவ ரேனும்மல ரூறுதேன்