பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/219

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சைவ சித்தாந்தமும் சமுதாய மேம்பாடும்

215


புலவ மெல்லாம் வெறி கமழும் அந்தண் புகலுர்தனுள்
நிலவ மல்குசடை அடிகள் பாதம் நினைவார்களே

(அடங்கன்முறை : இரண்டாவது திரு - 27.19)

என்ற பாடலாலும் அறிக. பார்ப்பனக் குலத்தில் தோன்றிய திருஞானசம்பந்தர் திருநீலகண்ட யாழ்ப்பாணரோடு கொண்ட தோழமையை அறிந்து உணர்க. சுந்தரர் ஆதி சைவ குலத்தில் தோன்றி, ஷத்திரிய குலத்தினராகிய மன்னரால் வளர்க்கப் பெற்று, உருத்திர கணிகையர் குலத்தில் தோன்றிய பரவையாரையும், வேளாளர் குலத்தில் தோன்றிய சங்கிலி யாரையும் திருமணம் செய்து கொண்டமையையும் அறிக..

சேக்கிழார் தாம் இயற்றிய பெரிய புராணத்தில் வழக்கிலிருந்த குலங்களைக் குறிப்பிட்டுக் கூறினாரேனும் அக்குலங்களிடையில் வேறுபாடின்றிக் கலந்து பழகியதைத் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், முருக நாயனார் மூவரும், முருகநாயனார் திருமடத்தில் உடனுறைந்து இருந்தனர் என்று கூறும் நெறியினையும் அறிக. திருவாரூரில் பலரோடு பழகியதால் ‘தீட்டு’ வந்துவிட்டது என்று கருதிய நமிநந்தி அடிகளுக்கு,

மேன்மை விளங்குந் திருவாரூர் வீதி விடங்கப் பெருமான்தாம்
ஞான அன்பர் பூசனைக்கு வருவார் போல வந்தருளி
ஞானமறையோய் ஆரூரில் பிறந்தார்எல்லாம் நங்கணங்கள்
ஆன பரிசு காண்பாய் என்றருளிச் செய்தங்கு எதிர் அகன்றார்

(திருத்தொண்டர் புராணம் : நமிநந்தி - 27)

என்று இறைவர் இவ்வாறு உணர்த்திய ஒருகுல நெறியை ஓர்க: ஒழுகலாறாக்குக. இன்று சிவநெறி மக்கட் சமயமாக மலர்ந்து வளரவில்லை. ஏன்? சாதி வேற்றுமைகளின் கொடுமையே தடை. திருக்கோயில்களில் சாதி, திருமடங்