பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/244

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

240

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தலைமுறை, சமயத்தை விடச் சிறந்த ஒரு கொடையை மனித உலகத்திற்கு வழங்கவில்லை! இனிமேலும் வழங்க முடியாது!

சமய நம்பிக்கை உண்மையைக் காட்டுகிறது. சமய நம்பிக்கையுடையோரின் அறிவு நேரடியாக இருக்கும். அவர்கள் சுற்றி வளைக்கமாட்டார்கள்! அவர்கள் அறிவில் எளிமையும், தழுவும் மனப்பாங்கும் பொதுளும் சமய நெறியில் நிற்காதவர்களின் அறிவு கூர்மையாக இருக்கலாம். அவர்கள் “கெட்டிக்காரர்களாகக்கூட இருக்கலாம். பெரியவர்கள் என்று பலர் சொல்லவும் சொல்லலாம். ஆனாலும் அங்கு உண்மை இல்லை; வெளிப்படையான எளிமையான கலந்துரையாடல் இல்லை; பரிவர்த்தனை இல்லை! அஃதோர் ஏகாதிபத்தியம்! ஏகாதிபத்தியம் ஆட்சியின் பேரால் இருந்தாலென்ன? சமய ஏகாதிபத்தியமாக இருந்தா லென்ன? அது தவறே! மனிதன் தன்னுடைய பழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சீர்படுத்திக் கொள்ளச் சமயம் பயன்படுகிறது. மனித வாழ்க்கையின் தேவையாகத் தோன்றிய சமயநெறியில் இன்றைய உலகம் நிற்கவில்லை. ஆனால் சமயம் பற்றிய பேச்சு, ஆரவாரமான வழிபாடுகள் இவைகளுக்கு யாதொன்றும் குறைவில்லை. உண்மையான சமய நெறியை யாரும் குறை சொல்வதில்லை! சொன்னாலும் சொல்பவர்கள் பைத்தியக்காரர்களாக்கப்படு கின்றனர்: பைத்தியக்காரர்களாக ஆக்கப்பட்டாலும் பரவாயில்லை! சமுதாய எதிரிகளாகச் சித்திரிக்கப்படுகிறார்கள்!

“ஒன்றே குலம் ஒருவனே தேவன்”, “சமுதாயம் வளர்ந்தால் சமயம் வளரும்”, “திருக்கோயிலில் எழுந்தருளி யுள்ள பெருமானைப் பூவும் புனலும் சொரிந்து எல்லாரும் வழிபடலாம்” என்ற சிந்தனைகளையே தாங்கிக் கொள்ள முடியாதவர்கள், நெருக்கடிக் காலத்தைப் பயன்படுத்தி ஒரு சமய இயக்கத்தையே முடக்கி விட்டனர். மறைமுகமான இந்து ஏகாதிபத்தியத்திற்குக் கால்கோள்செய்தனர். இலட்சக்கணக்கான மக்களிடத்தில் இயக்கத்தின் செய்தி சென்றிருந்