பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/284

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

280

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


மனித இன வாழ்வில் ஏற்பட்டுள்ள சமுதாயக் கண்ணோட்ட மின்மையேயாகும்.

வீடு மட்டுமா!

சமயம் வீடு பேற்றுக்காக மட்டுமே எழுந்தது என்று கூறப்பெற்றது. அதுசரியல்ல. மனிதனுடைய வாழ்வில் கலந் துள்ளது-மனிதனை வாழ்வாங்கு வாழத் துாண்டுவது சமயம். ‘யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை’ என்று இறைவனைப் பூசிக்கச்சொன்ன திருமூலர் சமுதாயத்தை மறந்து விடவில்லை-தொடர்ந்து சமுதாய நலம் காணும் அறக் கொள்கைகளையும் கூறுகிறார்.

யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே

“இம்மையே தரும் சோறும்கூறையும்” என்கிறார் சுந்தரர்! “தொழுகைத் துன்பம் துடைப்பாய் போற்றி” - என்கிறார் மாணிக்கவாசகர். ஆகவே வீடுபேறு பெறுவது மட்டும் சமய வாழ்க்கையின் குறிக்கோளல்ல. இறைவனாக நமக்கு அளிக்கும் பரிசு வீடு, பள்ளியில் ஏற்படுத்தும் பரிசைப் பெறுவதற்கு அறிவைப் பக்குவப்படுத்திக் கொள்வது போல, இறைவனளிக்கும் வீட்டினைப் பெறுவதற்கு நம்மைத் தகுதிப்படுத்திக் கொள்ளும் வாழ்க்கை முறையே சமயம்.

ஏகாதிபத்தியமா?

வாழ்த்தியவனுக்கு வீடுபேறு கொடுப்பதும் வாழ்த்தாதவனுக்கு வீடுபேறு தராததும் ஏகாதிபத்தியம் என்கிறார்கள்.

என்மீது அன்பு கொண்டு என்னை மேம்பட்டவனாக -மதிப்பிற்குரியவனாக எண்ணி என்னிடம் பக்தி செலுத்தும்