பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/286

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

282

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


-மதக் கொள்கை மலிந்த காங்கோவில் கலகமே நடப்பதாகவும் கூறப்பெற்றது.

உருசியாவில் மதம் இல்லை என்பது பொய்! மதத்திற்கு அங்கு செல்வாக்கு இல்லாமலிருக்கலாம். காங்கோவிலும் அரசியல் இல்லாமல் இல்லை. காங்கோவில் சமயத்தின் வழிப்பட்ட அரசியல் இல்லை. சமயத்தின் வழிப்பட்ட அரசியல் என்றால் இளங்கோ தன் அண்ணனுக்கு நாட்டைக் கொடுத்துவிட்டு நாட்டு நன்மைக்காகத் துறந்தது போலநாட்டின் நலங்கருதி-மக்கள். நலங்கருதி விட்டுக்கொடுக்கும் ஒரு யோக்கியமான சமயத்தின் வழிபட்ட அரசியல் இல்லை. சமயம் ஆதிபத்தியக்காரர்கள் கையில் சிக்கி இருக்கிறது. என்னைக் கேட்டால் அங்குள்ள அரசியல்வாதிகளுக்கு ஒரு “சமயவகுப்பு” நடத்தி, “நீ மனிதனாக வாழப் பிறந்திருக் கிறாய்” என்ற உண்மைச் சமயத்தின் அடிப்படைத் தத்துவத்தை அவர்கள் உணரும்படி செய்தால் அப்பொழுது நல்லன உண்டாகலாம். சண்டைகள் குறையும்! சமாதானம் பெருகும்!

உலகில் உள்ள அரசியல் எண்ணங்கள் அனைத்தையும் ஒன்றுபடுத்த முடியுமா?-சிந்திக்க வேண்டியதொன்று. உலகம் உள்ள வரையில்-சமுதாயத்தினிடம் சிந்திக்கும் ஆற்றல் உள்ள வரையில் சிந்தனையால் உலகை ஒன்றுபடுத்த முடியாது. உலகமனைத்துக்கும் ஒரே அரசியல்-சமயம்மொழி உருவாவது கடினம்-அருமையிலும் அருமை! ஆயினும் வேறுற்மைக்குள்ளும் ஒற்றுமை காணும் விழுமிய பண்பை வளர்க்க முடியுமா என்பதை ஆராயவேண்டும்.

“வேறுபடு சமயங்கள் புகுந்து பார்க்கில் விளங்கு பரம்பொருளே நின் விளையாட்டல்லால் வேறில்லை” என்ற தாயுமானாரின் விழுமிய கொள்கையை நடைமுறைக்குக் கொண்டுவர முயலவேண்டும். வேறுப்டக் கருதுவது வெறுப்பினால் அல்ல. சிந்தனை வளர்ச்சியின் கூறுகளும், சூழலுமே