பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/295

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

291


ஒப்புரவு வழிப்பட்ட சமயம் என்ற கொடி கண்டபிறகே அரசியல் என்ற கொம்பு தேவை.

கொம்பில்லாமலும் கொடி காய்க்கலாம். ஆனால் நிறைய இருக்காது. ஆனால் கொடி இன்றிக் கொம்பு மட்டும் இருந்தால் காய்ப்பு இல்லை. அதுபோல அரசியல் இன்றிச் சமயம் இருக்க முடியும். ஆனால், முழுநிறைவான சமுதாயம் இருக்காது. சமயம் இன்றி அரசியல் இருக்காது-இருந்தால் சமுதாயம் காலப்போக்கில் கரைந்து போகும்.

ஆதலால் கொடி நிலையில் சமுதாயத்தை வளர்த்துக் கொம்பு நிலையில் அரசியலை வளர்க்க வேண்டும்.

கொடியும் தேவை கொம்பும் தேவை
கொடி முன்வருவது-கொம்பு பின்வருவது
கொடி சமயம், கொம்பு அரசியல்.


சமுதாய முன்னேற்றத்துக்கு மிகமிக உரியது சமயம்.
சமுதாய முன்னேற்றத்துக்கு மிக உரியது அரசியல்!