பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/297

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

293


பூரணத்துவம் இல்லையோ, எங்கெல்லாம் நிறைவு இல்லையோ எங்கெல்லாம் தெளிவு இல்லையோ, எங்கெல்லாம் உறுதியில்லையோ, அங்கேயெல்லாம் இப்படிப்பட்ட கேள்விகள் எழுப்பப் பெறுவது இயற்கையினும் இயற்கை.

என்னைப் பொறுத்தவரையில் விஞ்ஞானம், அல்லது சமயம். (அதை மெஞ்ஞானம் என்று சொல்லி விடலாம்) விஞ்ஞானம் மெஞ்ஞானம் இரண்டையும் ‘அறிவியல்’ ‘அருளியல்’ என்று சொல்லலாம்.

அருளியலும் அறிவியலும் ஒரே பாதையை நோக்கிச் செல்லுகின்ற பயணந்தான் என்று கருதுகிறவர்களிலே நானும் ஒருவன். நான் மட்டுமல்ல- உலகத்திலே சிறந்த மேதைகள் என்று கருதப்பெறுகின்ற விஞ்ஞானப் பேராசிரியர்களில் பலர் இந்தக் கருத்தைத் தெளிவாகச் சொல்லுகிறார்கள். சிறப்பாக இந்நூற்றாண்டிலே வாழ்ந்த-நாம் மறக்க முடியாத ஒரு மாபெரும் அறிவியல் மேதை ஐன்ஸ்டீன். அந்த மேதை ஓரிடத்தில் சொல்லுகின்றான்: “உயர்ந்த அழகை, உயர்ந்த தன்மையை உயர்ந்த அனுபவத்திற் பார்க்கின்ற ஒன்றைப் பார்க்கின்றபோது ரசிக்காமல் அல்லது பாராட்டாமல், அதிலே நின்று நிலைபெற்று அனுபவிக்காமல் இருப்பது மனிதனால் முடியாத காரியம், அப்படி மனிதன் அதில் ஈடுபட்டு நின்று அனுபவிக்காமற் போனானேயானால் அவனது காது செவிடுபட்டது என்று பொருள்; அவனுடைய கண்கள் குருடாகி விட்டன என்று பொருள்; அவன் நடமாடித் திரிந்தாலும் பிணமாகி விட்டான் என்று பொருள்” என்று சொல்லுகின்றான்.

வானத்தினுடைய அற்புதமான கோலத்தைப் பார்க்கிறோம். நல்ல மலைச் சூழலிலே, உயர்ந்து கிடக்கின்ற மலையின் உச்சியிலே வெண்பஞ்சு எனக் கிடக்கின்ற மேகச்சுழலைப் பார்க்கின்றோம். பார்க்கின்றபோது கவிஞன் காட்டாத கற்பனை, ஓவியன் தீட்டாத கற்பனை, சிற்பி