பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/298

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

294

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


செதுக்காத கற்பனை ஒரு வண்ணமிகு காட்சியாகத் தோற்றமளிக்கிறது. இந்த வண்ணமிகு காட்சியைப் பார்க்கிற போது எங்கோ நெஞ்சு தொடுகிறது. எங்கோ நெஞ்சு ஓர் அனுபவத்தில் ஈடுபடுகிறது. அந்த ஈடுபாட்டனுபவம் இருக்கிறதே அதை அனுபவிப்பது மனிதனுடைய பிறப்புரிமைகளில் ஒன்று. அதை அனுபவிக்கின்ற மனிதன் விஞ்ஞானி ஆனாலும் சரி, மெய்ஞ்ஞானியானாலும் சரி ஒன்றையே அனுபவிக்கிறான். ஒரே அனுபவத்தில் பேசுகின்றான். அந்த அனுபவத்திற்கு நானும் பாத்தியப்பட்டவன் என்று ஐன்ஸ்டீன் தெளிவாகச் சொல்லுகின்றான். அந்த எண்ணங் களையெல்லாம் நினைவாக வைத்துப் பார்க்கின்றபோது விஞ்ஞானம், மெய்ஞ்ஞானம் இரண்டும் ஒரே பாதையில் போகின்றன என்பதற்கு இன்னும் தெளிவு சொல்ல வேண்டும். அல்லது இறுதி வடிவம் கொடுக்க வேண்டும் என்று சொன்னால், வாழ்க்கைப் பிரயாணம் ஒரு நூறு மைல் என்று வைத்துக் கொண்டால் 99வது மைல் வரை போகின்றவனுக்கு விஞ்ஞானி என்று பெயர்-அறிவியல் மேதை என்று பெயர். 100-வது மைலையும் கடந்திருக்கின்ற மனிதனுக்கு அருளியல் மேதை என்று பெயர்.

பொருளியலை ஆராய்கின்றவன் பொருளியலிலே இருக்கின்ற கூறுகளை ஆராய்கின்றவன்; பொருளியலின் ஒரு பகுதியை ஆராய்கின்றவன்; பொருளின் முழுத்தன்மையைக் கண்டதுமில்லை. காண்பதுமில்லை, காட்டியதுமில்லை. பொருளியலில் முழுத் தகுதியையும் பொருளியலின் கூறுபாடுகளையும் கலந்து உள் உணர்வுகளையும் உள் தொடர்புகளையும் ஆராய்ந்து பார்க்கின்ற ஒரு மாமேதையாக மெய்ஞ்ஞானி திகழ்கின்றான். இன்னும் சாதாரண உதாரணம் காட்டிச் சொல்ல வேண்டும் என்றால் பொருளியல் அல்லது தாவர இயல் வல்லுநர்கள் இருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். ஒரு தாவர இயல் வல்லுநன் மலரைப் பார்க்கின்றான். மலரைப் பார்க்கின்றபொழுது ஆராய்