பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/299

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அருளியலும் அறிவியலும்

295


கின்றான். அதை அக இதழ் என்று பிரிக்கின்றான். புற இதழ் என்று பிரிக்கின்றான். கேசரம் என்று பிரிக்கின்றான். பலவேறாக அதைப் பிரித்து ஆராய்ந்துகொண்டே போகின்றான். அதிலே இருக்கின்ற அமைப்புகளை எல்லாம் பார்த்து, மனத்திற்கு இருக்கின்ற கூட்டு அமைப்புகளை யெல்லாம் ஆராய்கின்றான். ஆனால், மெய்ஞ்ஞானி எண்ண பண்ணுகின்றான்? அந்த மணத்திற்குக் காரணமாக அடிப்படையாக-ஆதாரமாக இருக்கின்ற ஒன்றைப்பற்றி நெஞ்சத்தாலே ஆராய்கின்றான்-உணர்கின்றான்-அதற்கு மெய்ஞ்ஞானம் என்று பெயர். பொருளை ஆராய்கின்றவன் பொருளின் அடிப்படைக்குக் காரணமாக ஏன்? எதனால்” என்று கேள்வி கேட்டுக்கொண்டு, அதற்குக் காரணமாக இருக்கின்ற ஒன்றைப்பற்றி-ஒரு பேரறிவை நினைக்கின்றவன் சிறந்த மெஞ்ஞானியாக வளர்கின்றான் என்பதுதான் பொருள். இதை பிளேட்டோ இவ்வளவு தெளிவாகச் சொல்லாது போனாலும் கூட அவனுடைய இலக்கியங்களிலே இருக்கின்ற சில சான்றுகள் நமக்குச் சில விளக்கங்கள் தருகின்றன. அவன் தெளிவாக ஓரிடத்தில் குறிப்பிடுகின்றான். உலகியல் கலை உலகத்திலே அசல்கலை, நகல் கலை என்று இரண்டு உண்டு என்று கூறி அந்த அசல் கலைக்கும் நகல் கலைக்கும் இடையே இருக்கின்ற வேற்றுமையைப் பகுத்துக் காட்டுகின்றான். அப்படிப் பகுத்துக் காட்டுகின்ற பொழுது அசல் கலைக்கு மணம் இருக்கிறது-உயிர்த்தன்மை இருக்கிறது - இயற்கையிலேயே கவர்ச்சி செய்கின்ற சக்தி இருக்கின்றது - எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் உயிர்த்தன்மை இருக்கிறது என்கிறான். செடிகளிலே பூத்துக் குலுங்குகின்ற மணமிக்க மலர்களை மனிதன் பார்க்கின்றான். மனிதனுக்கு எப்பொழுதுமே ஒரு விருப்பம் உண்டு. எதைப் பார்த்தும் நகல் எடுப்பதிலே அவனுக்கு அலாதியான விருப்பம். நாம் இந்த அறிவியல் துறையில் வளர்ந்திருப்பதற்குக் காரணம் ஒன்றைப் பார்த்து அல்லது ஒன்றைக் கேட்டு அதன் வழியிலே நம்மை